இன்பத்துள் இன்பம்
123
அறத்துக்கு ஒரு கடவுளையும் (சிவபெருமானையும்),பொருளுக்கு ஒரு கடவுளையும் (திருமாலையும்) இன்பத்துக்கு ஒரு கடவுளையும்(மன்மதனையும்) உரிமையாக்கி, அவ்வப்பால் களுக்கு அவ்வவர்கள் பெயரால் கடவுள் வணக்கம் பாடியதுடன், கடவுளுக்கும் முப்பாலுக்கும் உரிய தொடர்பை அவர்கள் முடித்துக்கொண்டனர். ஆகவேதான் முப்பாலின் முழு நிறைவே வீடு' என்பதை உணராமல் வீடு ஒன்றையே கடவுளுக்குரிய பாலாக்கினர். அது மட்டுமோ? சமற்கிருதவாணர்களுக்கிசைய, இடைக்காலத் தமிழ்ப் புலவர்கள் தந்த தமிழ் இலக்கணத்தையும், தமிழ்ச் சொற்பொருளையும் மேற்கொண்டு, 'விடுபட்டதே வீடு’ என்று அச் சொல்லைத் தொழிற் பெயராகக் கொண்டனர். அத்துடன் துன்பம் விடுபட்டதே வீடு என்று கூடக்கொள்ளாமல் இன்பத்தினின்று, உலகவாழ்வினின்று விடுபட்டதேவீடு என்றும் வலிந்து பொருள்கொண்டனர். வாழும் இடத்துக்கே, இன்ப வாழ்வின் நிலைக்களத்துக்கே வீடு என்று தமிழர் பெயரிட்டழைத்தனர் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். இதனால் வீட்டுப்பாலை வெறுப்புத் துறவறம் என்றே அவர்கள் கருத நேர்ந்தது. மற்றும் இதே குறிப்பால் துறவறத்தை அறத்துப்பாலில் சிலரும், சிலபோதும்; வீட்டுப்பாலில் சிலரும், சிலபோதும் உட்பட்டதாகக் கருதிப் பெரிதும் மயக்கமுற்றனர்.
சமற்கிருதவாணரின்
று
இக்குளறுபடி காணாதவர்
திருவள்ளுவர் திருக்குறளின் அருமையை முற்றிலும் உள்ளவாறு உணரமுடியாது. சமற்கிருதக் குளறுபடியின் திரைமூலமே திருக்குறளைக் கண்டுவந்துள்ள, கண்டுவரும் இடைக்கால, இக்காலத் தமிழர் பலர் திருவள்ளுவர்கண்ட இன்பத்தையோ, அதற்கு இணை துணையான பொருளையோ, அறத்தையோ, அவற்றின் பாகுபாட்டு ஒழுங்கினையோ ஒருசிறிதும் உணர மாட்டாது உழல்வதில் வியப்பில்லை. மனிதப் பண்பு சான்ற மேலையுலகம்கூட இன்னும் சென்றெட்டாத சிறப்பினையுடைய தெய்வப் பண்பு சான்ற திருக்குறளை, அம்மனிதப் பண்பிலும் கூடக் குறைபட்ட சமற்கிருத சுமிருதிகளுடனோ, சாணக்கியர் பொருள் நூலுடனோ (அர்த்த சாத்திரத்துடனோ), புராண இதிகாசங்களுடனோ ஒப்பிடவும், பொருத்திக் காணவும் அவர்கள் துணிந்ததன் காரணம் இதுவே. இத்துடன் அமையாமல் வேறு சிலர் அந்நூல்களுள் ஒன்றேனும் திருவள்ளுவர்க்கு