130
||__
அப்பாத்துரையம் - 15
இவ்வாறு வேறு எவரும் அறிந்து கூறாத முறையில் ஆண் - பெண் தொடர்பான குடும்ப இன்பத்தின் தனிச்சிறப்பை வள்ளுவர் ஒருவரே எடுத்துக்காட்டியுள்ளார். ‘மற்ற எல்லா இன்பங்களும் ஒருபுலன், இருபுலன் களுக்கு நுகர்வு அளிக்கும். இது ஐம்புலன்களையும் அளாவிய இன்பம்' என்று அவர் கூறிய பின்னரே நாம் அறிகிறோம். அதுபோலவே கவின்கலைகளில் மற்றவை ஒன்றிரண்டு புலன்களுக்கே இன்பம் ஊட்டுவன. இலக்கியக் கலையின் தனிச்சிறப்புகளுள் ஒன்று - அதுவே ஐந்து புலன்களுக்கும், அது கடந்த ஆறாம் புலனாகிய உள்ளத்துக்கும் நுகர்வு அளிப்பது என்பதே! அந்த உள்ளத்திலும் அழகுணர்வு, அறிவுணர்வு, நன்மையுணர்வு ஆகிய எல்லா வகைப்பட்ட உணர்வு நிலைகளுக்கும் இலக்கியக் கலை ஒருங்கே இன்ப மூட்டுவது ஆகும்.
இலக்கியக் கலைஞனைத் திருவள்ளுவர் 'சொல்லேருழவன்’ என்று சிறப்பித்துள்ளார். அவன் 'சொல்' என்ற கலப்பையால் மக்கள் உள்ளமென்னும் நிலத்தை உழுது, அதில் அழகு, அறிவு, நன்மை, பண்பு ஆகிய விதைகளை விதைத்து, வாழ்வையே வளர்த்து வளப்படுத்துகிறான் என்ற கருத்தை இத்தொடர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. கம்பநாடரும் இக் கலைஞனைச் செஞ்சொல் அறிவாளன் என்று குறிப்பிட்டார். செம்மை என்பது தமிழில் இனிமை, நடுவு நிலைமை, நேர்மை, திருத்தம் ஆகியவற்றைக் குறிக்கும் பண்புச்சொல். இத் திறங்களை யுடைய சொற்களால் அறிவு வளர்ப்பவன் இலக்கியக் கலைஞன் என்று தமிழின் பரந்தகன்ற காவியக் கவிஞர் குறித்தார்.
மொழிசார்ந்த
கலை
இலக்கியமாவதுபோல, மொழிசார்ந்த அறிவுத்துறை இயல்நூலாகவும், மொழிசார்ந்த சமுதாய உணர்வுத்துறை அறநூலாகவும் அமைகிறது. ஆனால், மொழி சார்ந்த இம்மூன்று துறைகளிலும் முதல்துறையும், முந்திய துறையும் இலக்கியமே. அதுவே அவ்விரண்டின் மூத்த செல்வியாய், அவற்றின் செவிலித் தாயாய், அவற்றைத் தன்மடிமீது வைத்து வளர்த்து வந்துள்ளது. தொடக்கத்தில் அவை மூன்றும் இலக்கிய ஆடையுடுத்தே உலவின. இன்றும் இயல்நூல்களில் தலைசிறந்தனவும், அறநூல்களில் தலைசிறந்தனவும் நல் லக்கியமாகவும் இயல்வதுண்டு. தமிழில் தலை சிறந்த