உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

129

கலைகளுள் தலைசிறந்தவை கவின்கலைகள். கவின் கலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த கவின்கலை இலக்கியமே.

இலக்கியம் கவின்கலைகளுள்ளும் சிறந்ததாகக் கருதுப் படுவதற்குரிய காரணங்கள் பல.ஆனால் தலைசிறந்த, நடுநாயகமான காரணம் அது மொழி சார்ந்த கலை என்பதே.

மொழி மனித இனத்தின் அறிவுச் சேமக்கலம். அதன் ஒவ்வொரு சொல்லும் ஒரு கருத்தின் கருவூலம், இனவரலாற்றின் ஒரு புதைபெட்டகம்; அனுபவம் என்னும் ஆழ்சுரங்கத்தில் அல்லது ஆழ்கடலிலிருந்து மனித இனம் அருமுயற்சியால் கண்டெடுத்துப் பட்டை தீட்டிப் பேணிய பொன் வெள்ளிப் பாளம், முத்துமணி பவழம்! மொழி வளர்த்துள்ள உணர்ச்சி களோ இனசமுதாய வாழ்வின் நீடித்த பயனான பண்புப் பழங்கள், பண்பாட்டு உயிர்விதைகள்! இத்தகைய அறிவு நிலத்தின் மீது வித்தூன்றி, பண்புத்தளத்தின்மீது நின்று, அழகுவான் நோக்கி எழும் இன்பமலர்க் கனிமரமே அறத்தின் ஆழ்தடமளாவி, பொருளின் பரப்பகம் கொண்டு, இன்பமுகடுற எழுப்பப்படும் அறிவின்ப மாளிகையே இலக்கியம். அதன் தனியுயர் சிறப்புக் குரிய தலையாய காரணம் இதுவே.

மற்றக் கலைகளைவிட, கவின்கலைகளைவிட முனைப்பாக, இலக்கியம் இனவளர்ச்சியோடொத்து, சமுதாய வாழ்வோ டிணைந்து வளர்வது. அது வாழ்வின் எல்லாக் கூறுகளையும் வளர்ப்பது. மனித இன வாழ்வின் எல்லையற்ற பரப்பையும் அதன் நாட்டு, இன வேறுபாடுகளையும், கால வேறுபாடு களையும் பளிங்குபோல் எதிர்நிழலிட்டுக்காட்டி, அவ் வேறுபாடு களிடையே வாழ்க்கைப் பண்பால் வளர்ந்து வாழ்க்கைப் பண்பையும் வளர்க்கும் இன்னொரு கலையை-இலக்கியமன்றி வேறு ஒரு கலையை - நாம் காணமுடியாது.

'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'

(காண்பது,கேட்பது, சுவைப்பது,முகர்வது,தொட்டுணர்வது ஆகிய ஐம்புல உணர்வுகளும் பெண்ணிடமே அதாவது ஆண் பெண் தொடர்பு ஒன்றிலேயே உண்டு.)