உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

அப்பாத்துரையம் - 15

கலை பயன் நாடாதது-துய்ப்பவர் பற்றியமட்டிலேயே இது முழு உண்மை.படைப்பவர்கூடக் கலைஞர் என்ற அடிப்படையில் அதை நாடுவதில்லை. ஆனால், அவர்கள் இன உள்ளம் ஒரு பயனை நாடியே கலையில் ஆர்வம் கொள்கின்றது. அது மற்ற எப்பயனுமல்ல - இன்பமே வாழ்க்கையின் நோக்கமேயாகும். ஆனால், இந்தப் பயனை அது சமுதாயத்தை நோக்கி, இன்பத்தை, னப்பயனை நோக்கிச் செலுத்துகின்றது.

-

கலை பயன் நாடுவதன்று. ஆனால், இன்பமே பயனாகக் கொண்டது. அது மட்டுமன்று. இனநோக்கமாகிய இன்பத்தை இனத்தலைவர் நோக்கமாகிய பயனுடன் அது இணைக்கிறது.

பயனோக்காதவை மட்டுமல்ல, பயனளிக்காதவைதாம் கலைகள் என்றால், தீய பயன்தரும் கொலையும் புலையும் கலைகள் ஆதல் வேண்டும் - அவை கலைகள் ஆகா என்பதில் ஐயமில்லை. ஆகவே சிறுபயன், தற்காலிகப் பயன் நாடாது, முழுநிறை பயனை இன்ப வடிவில் இயல்பாக நாடுபவையே கலைகள், கவின் கலைகள் ஆகும் என்பது தெளிவு.

பயன்

என்பது

மேலீடாகக் காண்பவர்களுக்குப் அழகுணர்வுடனும் இன்ப உணர்வுடனும் கலையார்வத்துடனும் தொடர்பற்ற அவற்றுடன் ஒவ்வாத-சொல்லாகத் தோன்றுகிறது. இதற்கு ஒரு தனிக்காரணம் உண்டு. பெரும்பாலும் ‘புறப்பயன்’, தனிமனிதன் ‘பயன் நோக்கமாகிய தன்னலம்', 'தனிமனிதன் குறுகிய தனிப்பயன் நோக்கமாகிய சூழ்ச்சித்திறம்' ஆகிய இழி பொருள்களுடன் கலந்தே ‘பயன்' என்ற சொல் வழங்கப் பெறுகிறது. அத்துடன் அது நேராக இன்பநோக்கைக் குறிக்காமல் இன்பத்துக்குரிய கருவியையே குறிக்கிறது. இது போலவே 'கலை கலைக்காகவே' என்ற வாசகத்திலும், கலை என்றசொல் அதன் முழு மெய்ப்பொருளில் பெரும்பாலும் உணரப்படுவதில்லை. ஏனெனில் ‘கலை கலைக்காகவே', என்பதன் முழுப்பொருள் கலை கலைஞனுக்காகவே 'கலை கலைஞன் இனத்துக்காகவே' ‘கலை கலைஞன் சமுதாயத்துக்காகவே' என்ற கருத்துகளை உட்கொண்டதேயாகும். 'கலை' என்றவுடன் பலரும் 'வாழ்க்கைத் தொடர்பற்ற' என்று எண்ணுவதால்தான் கலை கலைக்காகவே' என்று நிறை மெய்ம்மை வாசகம் எதிர் வாதத்துக்குரிய ஒன்றாய்விடுகிறது.

6