இன்பத்துள் இன்பம்
127
தனி மனிதனும் தனி உயிரும் இயல்பாக விரும்புபவை அழகும் இன்பமுமே. மனித இனமும் உயிரினமும் பொதுவாக விரும்பி ஈடுபடுபவை அவை. ஆனால், பயன் விருப்பம் அனுபவ முதிர்வினால், அறிவு உணர்வினால், நன்மை உணர் வினால் உண்டாவது. அது தனி மனிதன் நோக்கமும் அன்று. பொதுநிலை இன நோக்கமுமன்று. அறிஞர், அறவோர்-அதாவது இனத் தலைவர், சமுதாயத் தலைவர் - காணும் குறிக்கோளாக அஃது இயல்கின்றது. தனி மனிதன், தனியுயிரின் நோக்கம் இன்பம்; குடும்ப, இன சமுதாயத் தலைவர்களின் குறிக்கோள் பயன் என நாம் இவ்விரு வேறுபட்ட ஆனால் மறை தொடர்புடைய சொற்களின் பொருள் தொடர்பை வகுத்துக் கூறலாம்.
ரு
இன்பம் இனிய தின்பண்டம் போன்றது. விளையாட்டுப் போன்றது. பயனோ, மருந்து போன்றது. இன்றியமையாத தொழில்போன்றது. மருத்துவன் வழிநின்று நாம் மருந்தை உண்பதுண்டு. ஆனால், மருந்தே உணவானால், அதை உண்டு வாழ்வதைவிட, மாள்வதே மேலானது என்றுதான் மனித இனமும், உயிரினமும் பொதுவாகக் கருதக் கூடும். மருந்துண்டு வாழும் வாழ்வு வாழ்வின் இன்பம் தாராது. பஞ்சணை மெத்தையில் ஒருசிறு நுண்மயிர் இருந்தால் உறுத்தும் என்று கருதும் இன்பவாணர்கூட இன்றியமையாத் தேவை ஏற்பட்டால், அவ்வின்பத்தைத் தற்காலிகமாகத் தடுத்து, மருத்துவ விடுதியின் முரட்டுப் படுக்கையையும் அறுவையையும் ஏற்கக்கூடும். ஆனால், வாழ்நாள் முழுவதும் மருத்துவ மனையிலும் அறுவையிலும் கழிப்பதானால், அத்தகைய வாழ்வைவிடச் சாவே மேலான தென்று எவரும் கருதாமலிரார். பயன்தரும் தொழிலை, பயன் நாடிய கலையை மனிதன் செய்ய இணங்கினாலும், தின்பண்டத் திலும் விளையாட்டிலும் சிறுவர் காட்டும் ஆர்வத்தை, விருவிருப்பை, எவரும் அவற்றில் கொள்ள முடியாது.
பயனோக்கிய கலைகள் போலல்லாது, ஆனால் பயனோக்காமலே முழுநிறை பயனை அளிக்கும் கலைகளே கவின்கலைகள். தின்பண்ட உருவில் அமையும் அல்லது அமைக்கப்படும் உணவு போன்றவை, மருந்தினும் நலம் தரும் ன்னுணவு போன்றவை. அவை இன உணர்வில் இயல்பாகவோ இனத்தலைவர், சமுதாயத்தலைவர் புனைவுத்திறனாலோ
அமைபவை.