இன்பத்துள் இன்பம்
139
தொடர்பற்ற பொருள்களே. ஆனால், மண்ணும் கல்லும் மரமும் இணைத்து மனிதன் வெட்ட வெளியிலே சுவர், கூரை, தளங்கள் அமைக்க முடிகிறது. அவை வானவெளியில் ஒரு கூடமைத்து அதை ஒரு வீடாக்கி விடுகின்றன. ஆனால், அதே வீட்டை இன்னொரு வகையாலும் அமைக்க முடியும். அஃது இன்னும் சிறந்த, உறுதியான வீடாகக்கூட அமையும். மண், கல் ஆகியவற்றால் வான வெளியை அடைத்து வீடாக்குவதுபோல, நிலத்தையோ, மலையையோ குடைந்து, அவற்றினிடையே வேண்டிய இடங்களி லெல்லாம் வெளியிடம் உண்டுபண்ணி வீடமைக்கவும் முடியும். பண்டைத் தமிழர் கட்டிய குகைக் கோவில்களும், இன்றும் உலகின் வடகோடியிலுள்ள மக்கள் பனிக்கட்டி குடைந்து அமைக்கும் இல்லங்களும், எலி, முயல் வளைகளும் இவ்வாறு அமைக்கப்படுபவையே. நம் வீடுகளில் நாம் சுவரும் கூரையும் தளமும், தூண்களும் கதவு பலகணிகளும் முயன்று கட்டுகிறோம். வெளியிடம் இயற்கையின் கூறாய் அமைகிறது. ஆனால், பிந்திய உறையுள்களில் சுவரும், கூரையும் தளமும் இயற்கையாய் அமைந்து விடுகின்றன. உள்வெளி யிடத்தையே முயன்று அமைக்கிறோம்.
ய
இன்ப அடிப்படையில் இன்ப மாளிகை அமைப்பவர் நம்மைப்போல் சுவர் கூரை எழுப்பி வீடமைப்பவர். துன்ப அடிப்படையில் மாளிகை கட்டுபவர் குகைக்கோவில், பனிவீடு கட்டுபவர் போன்றவர்கள். பின்னது கடுமுயற்சியால் அமைவது. ஆனால், உறுதியில் மிக்கது என்று கூறத் தேவையில்லை.
இன்பதுன்ப நடுநிலையுணர்வால் ஏற்படும் இந்த நீடின்ப அமைதியையே புத்த, சமண சமயங்களும் மேலே நடுநிலை வாணரும் (Stoics) பேரின்ப நிலை (நிருவாணம்) என்று கருதினர். பகவத்கீதை
"இன்பதுன்ப ஒப்புரவறிந்து’
(சுகதுஃக்கே சமே க்ருத்வா)
என்று குறிப்பது இதனையே. ஆனால், உட்பொருள் உணர்வின்றிக் காரணகாரிய விளக்கமில்லாமல் உலக
அறிஞர் கிளிப்பிள்ளைகள் போல் கூறுவதைத் திருவள்ளுவர் பெருமான்