உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

||--

அப்பாத்துரையம் - 15

அன்பு, வாழ்வின் இன்பம் என்ற அடிப்படையில் மனிதப் பண்பு நிறைந்த தெய்வீகப் பண்புடன் நமக்கு விளக்கித் தந்துள்ளார்.

திருக்குறள் அறநூல் மட்டுமல்ல, பொருள்நூல் மட்டுமல்ல. அதுவே இன்பநூல், பேரின்பநூல். அந்நூலைத் துருவி யாராயாமல், வேறெந்நூலை ஆராய்ந்தாலும், உண்மை இன்பத்தின் தன்மை காணமுடியாது. திருக்குறளுக்கு மற்ற நூல்களில் விளக்கம் தேடுவதைவிட, உட்பொருள் தொடர்பு மறைந்துவிட்ட அந்நூல்களின் நல்லுரை மரபைத் திருக்குறட் சிந்தனையால் விளக்கம் பெறுவிப்பதே அறிவியல்புடைய செயல் ஆகும்.

இன்பவழி கண்டுரைத்த வள்ளுவர் வழி நின்று உண்மை இன்பம், இன்பத்துள் இன்பம் காண்போமாக!