இன்பத்துள் இன்பம்
143
மூட்டையின் முடிச்சு ஒரே முடிச்சாய் இல்லை. முடிச்சுக்குள் முடிச்சு, அதற்குள் முடிச்சு என நீண்டுகொண்டே சென்றது. அவன் ஒன்றன்பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே இருந்தான். அவ்வளவு சிறிய மூட்டைக்குள் எப்படி அத்தனை முடிச்சுகள் இருக்க முடியும் என்றனர் சிலர். அத்தனை முடிச்சுகள் கடந்த பின் அதில் வேறென்ன இருக்க முடியும்? வெறும் காற்றுத்தான் இருக்கப்போகிறது என்று ஆத்திர முடிவு கட்டினர் வேறு சிலர்.
முடிச்சுகள் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே செல்வது கண்டு பொறுமையிழந்தனர் பலர்.
சிலர் அவன் செயல் கண்டு சிரித்தனர்.
சிலர் சீறினர்.
66
இது என்னடா வெங்காயம்!” என்று பாதி சிரிப்பும் பாதி சீற்றமுமாக மன்னன் கேட்டான். 'இதை வெளியிலிருந்தே அவிழ்த்துக்கொண்டு வந்தால் என்ன, என் முன்தானா அவிழ்க்க வேண்டும்! எனக்கு வேறு வேலையில்லையா?' என்று அருகி லுள்ளோர் கேட்க முணுமுணுத்துக்கொண்டான்.
“அரசே! நீங்கள் மன்னர் என்றால் மன்னர்தான். மன்னர் மன்னர் தான். இந்த முடிச்சின் அருமையை நீங்கள் ஒருவர்தான் உணர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இது ஒரு வெங்காயம் என்பதை நீங்கள் மட்டுமே கண்டு சொன்னீர்கள்” என்றான் திருவளர்த்தான்.
மன்னனுக்குச் சீற்றம் பொத்துக்கொண்டு வந்தது.
66
'ஒரு வெங்காயத்துக்காகவாடா, என்னையும் இத்தனை பேரையும் இப்படி காக்கவைக்கிறாய்! இதோ.."
"இல்லை அரசே மன்னிக்கக் கோருகிறேன். இது வெங்காய மன்று. வெங்காயம் போன்றதென்று நீங்கள் வெங்காயத்தின் பண் பறிந்து சொன்னதாகத்தான் நான் எண்ணினேன். உரிக்க உரிக்க வெங்காயம் சிறுத்துக்கொண்டே போகும். ஆனால் காரம் சிறுக் காது.அது அருகில் உள்ளோர் மூக்குவழிச் சென்று கண்களைச் சீறவைக்கும். அதுபோல இதுவும் அவிழ்க்க, அவிழ்க்கச் சிறிதாகிக்கொண்டே சென்று எல்லார் கண்களையும் சீறவைக்கிறது!” என்றான்.