உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

இன்பத்துள் இன்பம்

161

தொடக்கத்திலிருந்து நிலவிவரும் உயிர் உலகுபற்றிய கோட்பாட்டிலே ஒரு புரட்சி இன்று ஏற்பட்டுவருகிறது. இயற்கை, உயிர்களின் உடல்கள் ஆகியவற்றின் அடிப்படை பருப்பொருளே என்ற பழங் கோட்பாடு சரிந்துள்ளது. ஆற்றல், பொருள் இரண்டும் ஒரே பொருண்மையின் பொருள் நிலை, இயக்க நிலை ஆகிய இரு கூறுகளே என்ற கொள்கையும், இயக்க ஆற்றலின் ஒரு தோற்றமே பொருள் என்ற கொள்கையும் இதனால் வலிவுற்று வருகின்றன. எனவே உயிரும் ஒரு தனி இயக்க ஆற்றலே என்ற கொள்கை உயர்படி அறிவுலகிலே இன்று நிலவுகின்றது.

உடலுக்கும் உயிர்க்கும், அதுபோல இயற்கையில் பொருளுக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு ஒருதன்மை யானதே. ஆனால், உடலுயிர்க்கும் - இயற்கைக்கும் உள்ள தொடர்பை நுனித்தறிந்து விளக்குதல் எளிதன்று. அவ்வாறு ஓரளவு விளக்கிய தற்கால அறிஞர் அறிவுலகின் இக்கால ஊழிப்பேரறிஞ'ரான ஐன்ஸ்டீனே ஆவர். அவர் விளக்கம் சமயவாணர் பலர் சுட்டிக் காட்டியுள்ள 'பிண்டம்' 'அண்டம்' என்ற பாகுபாட்டின் புத்தறிவு விளக்கமேயாகும். ‘எல்லையற்ற இயற்கையின் எல்லையுற்ற ஒரு சிறு படிவமே உயிர்’ என்பதே அது.இரண்டின் சரி சம ஆற்றல் நிலையே உயிரியக்கம்; அதுவே உயிர்க்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு ஆகும்.

அனைத்துலகை இயக்கும் அனைத்துயிராகவே கடவுள் கருதப்படுகிறார். ஐன்ஸ்டீன் உயிர் இயல்பின் கோட்பாடு சமய அறிஞரின் இம்முடிவுக்குப் புது விளக்கம் தந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

உடலின் ஆற்றலே உயிரானால், உடலுக்குள் உயிராக அந்த உயிராற்றல் உள்நோக்கிச் செறிவுற்றுச் செல்வது என்பது தெளிவு. வளர்ச்சிக்கு உதவும் அகமும் விளக்குகின்றன.ஆனால் புறம் எது, அகம் எது; புறம் எங்கு முடிகிறது. அகம் எங்குத் தொடங்குகிறது. என்று பிரித்து யாராலும் காட்டமுடியாது. உடம்புக்குள் உடம்பாக உயிர்ப்பண்பு உடற்கூறாகவே உள்நோக்கி நுணுகிப் பெருக்கிக்கொண்டு போகிறது. தோலைவிடத் தசை. தசையைவிடக் குருதி, குருதியைவிட நாடி நரம்புகள். நாடி நரம்புகளைவிட எலும்புக்கூடு. எலும்புக் கூட்டைவிட உள் எலும்பு அல்லது உள்நாடி என அது செறிவுப் பெருக்க