160
|| - -
அப்பாத்துரையம் - 15
உயிரும் உடம்பும் வேறுவேறா? ஒன்றா?
உலக அறிஞர் என்ன கருதினர், கருதுகின்றனர்?
திருவள்ளுவர் என்ன கருதினார், என்ன கருதியிருக்கக்கூடும்?
உடல் உயிரல்ல-உடல் வேறு, உயிர் வேறு என்பதையே சமயவாணர், சிறப்பாகச் சமயம் சார்ந்த அறிஞர் பெரிதும் வலியுறுத்தினர். ஆனால், வேறு என்று கூறிய அறிஞர் அவற்றின் தொடர்பு, உயிரின் இயல்பு ஆகியவற்றைப்பற்றி இதற்கு மேல் விளக்கம் தர முடியவில்லை.
உயிரியல்பை உணர முடியாதவர்கள் கடவுள் இயல்பை ஒருபோதும் உணர முடியாது. ஏனெனில் உடல் காணப்படு பொருள்; உயிர் காணப்படாப் பொருளாயினும், உடலிலே அதன் உயிர்ச்செயலை முனைப்பாகக் காண்கிறோம். கடவுளோ காணப்படாதவர் மட்டுமல்லர். உயிரின் செயலுருவான உடல் போன்ற ஒரு முனைப்பான செயற்களம் அற்றவர். உயிர் இயல்பைக் காணாத சமயவாணர், உயிர், கடவுள் ஆகிய இரண்டின் இயல்பு வகையிலும் பெரும்பாலும் கற்பனை யுலகிலேயே உலவுவதன் காரணம் இதுவே.
சமயவாணர் மட்டுமன்றி, உயிர் நூலாரும் இயல் நூலாரும் பொதுவாக, அகப்பண்பாகிய உயிரில் கருத்துச் செலுத்தியதே இல்லை. ஆனால், உயிர்நூலார் உடலின் உயிர்ப்பண்பை நன்கு அலசி ஆராய்ந்துள்ளனர். அதனடிப்படையாக உயிரின் இயல்புபற்றிச் சிந்தித்த மெய்விளக்க அறிஞர் பலர் உண்டு. இயற்கையின் உள்ளீடாக இயங்கும் வெப்பம், காந்த ஆற்றல், மின் ஆற்றல் முதலிய ஆற்றல்கள் போல, உடலைக் களமாகக்கொண்டு இவற்றினும் நுண்ணியதாக, இன்றளவும், இயல் நூலறிவால் அறியப்படாத முறையில் இயங்கும் ஒரு நுண்ணாற்றலே உயிர் என்று அவர்கள் கருதுகின்றனர்.
உடல், இயற்கை ஆகிய இரண்டிலும் பொருள், ஆற்றல் என்ற இருதிசைக் கூறுகள் உண்டு. இயல் நூலார் இவற்றைக் காண்பதுடன் நில்லாது, ஒன்று மற்றொன்றாக மாறக்கூடும் என்றும் செயல் தேர்வுகள் மூலம் கண்டறிந் துள்ளனர். இவற்றின் பயனாக உலகிலும் சரி. இயல் ஆராய்ச்சித் துறையிலும் சரி,