(172
||– –
அப்பாத்துரையம் - 15
பால் இனிப்பானது. பாலே உண்டவர்க்கு, பாலே ஒவ்வொரு நாளும் உண்டு உண்டு பழகியவர்க்கு அஃது இனிக்காது, புளிக்கும். ஏனெனில் அவரிடம் பாலின் அவாத் தளர்ந்துவிட்டது. அதன் புத்தவா ஆர்வம் போய்விட்டது. அவாவின் புதுமை, உயிர்ச் சின்னம் ஆர்வம். புதுமை தரும் உயிர் இன்பம் இன்பப் பொருளாகப் பழகிவிட்டபின்,அதுவேபுளிப்பாக, கசப்பாக உவர்ப்பாக மாறிவிடுகிறது.
இன்பம், அவா, ஆர்வம் ஆகியவற்றின் உயிர் உண்மை அறியாதவர்களல்லர் சமயவாணர்கள், அறநூலார்! அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகிய வீட்டைப் பேரின்பம் என்றனர். இறைவன் தாள் நிழலில் வைகும் உலகை இன்ப உலகென்றனர். அதைநோக்கி மக்கள் அவாவை, புதுமை யார்வத்தை எழுப்பினர். அவா பழைமையாக ஆக, ஆர்வம் தளரத் தளர, புதுப்புது வகையாக, புதுப்புது முறைகள் புனைந்து, புதுப்புதுப் பூசனை வினைமுறைகளால், விழா வேடிக்கைகளால் அதை ஊக்கவும் அவர்கள் தவறவில்லை.
'நல்ல பண்புகள் இன்பம் தருவன. நிலையான இன்பத்துக்கு இட்டுச் செல்வன; தீய பண்புகள் இன்னாமை, ஓவா இடர் தருவன' என்று அறநூலார் மேன்மேலும் விளக்குகின்றனர். இன்ப நாட்டத்தை, அவாவை எழுப்பியே பண்பு வளர்க்க அவர்கள் சற்றும் தயங்கவில்லை. வள்ளுவர் பெருமானைப்போல இன்பத்தையே குறிக்கோளாகக் கொள்ளாவிடினும், அதைத் தூண்டிலாகவேனும் பயன்படுத்த அவர்கள் தவறவில்லை!
இன்ப நாட்டமே அவா. சமயவாணர், சமய அறிவு நூலார், அற நூலார் இன்பக் குறிக்கோளை ஏற்றுள்ளனர். வளர்க்க ஒருப்பட்டுள்ளனர். ஆயினும், அதே சமயம், அதே மூச்சில் அவர்கள் அவாவைக் கண்டிக்கத் தவறவில்லை, கண்டித் துள்ளனர்.
அவா உயிர்ப் பண்பு. அதை விலக்குதல் அரிதினும் அரிது. இதனையும் நன்கு உணர்த்தியவர்களே, வற்புறுத்தி உணர்த்திய வர்களே அவர்கள். ஆயினும், இன்பக் குறிக்கோளை ஏற்று, அதை நாடும் அவாவை மட்டும் பழிக்க அவர்கள் தயங்கவில்லை.
இன்பம் நாடாத உயிர் இல்லை. அதற்காக எத்தனை கடுமுயற்சிகளில் ஈடுபடவும், எவ்வளவு இன்னல்களை ஏற்கவும்,