இன்பத்துள் இன்பம்
173
துன்பங்களைக் கடந்து செல்லவும் மனிதர் தயங்குவதில்லை. வாழ்வில் இன்பம் காணாதவர்கள், காணும் வாய்ப்பற்றவர்கள், காணும் நம்பிக்கையற்றவர்கள்கூட, மாள்வின் பின் இன்பம் கைவரும் என்ற நம்பிக்கையால் ஆறுதல் பெறமுடிகிறது. சமயவாணரே இந்நம்பிக்கையை நீர்வார்த்து வளர்க்கின்றனர். ஆயினும், அதே மூச்சில் அவாவை அறவே நீக்குதல் வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை பகர்கின்றனர்.
அவா இயங்காமல் அடக்குவதென்பது காற்றை இயங்காமல், நீரை ஓடாமல், தீயைச் சுடாமல் தடுப்பது போன்றது. இந்த உவமைகளைக்கூடச் சமய அறிவு நூல்களில் காண்பது அரிதன்று. மதயானையைப் பணியவைக்கலாம். கரடி வெம்புலி களை அடக்கலாம். அவா அடக்குதல் அரிது, அரிதினும் அரிது என்று அவர்கள் வருணிக்கத் தயங்கவில்லை. ஆயினும் 'அவாவை அடக்கு' என்று அவர்கள் போதிக்கின்றனர்.
'அற்றது பற்றெனில் உற்றது வீடே'
(திருவாய்மொழி)
‘ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள்
‘ஈசனோடாயினும், ஆசையறுமின்கள்'
(திருமந்திரம்)
'பிறந்தார் பெறுவது பெருகிய துன்பம்,
பிறவார் பெறுவது பெரும் பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது அறிக’
(மணிமேகலை)
என்று தமிழ்ப் பக்தி நூல்களும் தமிழ்ச் சைவ ஆகமமாகிய திருமந்திரமும், தமிழ்ப் புத்த காவியமாகிய மணிமேகலையும் ஒருங்கே வலியுறுத்துகின்றன.
திருக்குறளிலும் நாம் இதே கருத்தை, இக் கருத்துகளை
யெல்லாம் ஒருங்கே காணலாம்.
'இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்'
'அவாவில்லார்க்கு இல்லாகும் துன்பம்'
இக்குறட்பா வாசகங்களில், அவாவே இன்பத்துக்குத் தடை, துன்பத்துக் கெல்லாம் மூலக்காரணம் என்று வள்ளுவர்