உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

185

அவாக்களையுடைய உயிர்களில் உள்ள ஆட்சியே இரண்டாக ஆட்சியாய் அமைவதனால், அவர்கள் குறிக்கோள்கள் இன்னும் பல. ஆங்கிலப் புனைகதைப் பேராசிரியரான ‘தாக்கரே' (W.M. Thacheraey) என்பவர் 'முனைவர் ஜெக்கிலும் திருவாளர் ஹைடும்' என்ற புனைகதை மூலம் இத்தகைய ஓர் இரண்டக உள்ளத்தின் வாழ்வு தாழ்வுகளைத் திறம்படத் தட்டியுள்ளார். இரண்டுபட்ட உள்ளம் இரு உள்ளங்களாக ஒரே மனிதனை இரு வேறுபட்ட ஆட்களாகச் செயலாற்ற வைக்கிறது. இப்படம் முனைப்பாகப் பெருக்கிக் காட்டப்பட்ட ஒன்றானாலும், னவாழ்வில் சற்றேறக் குறைய எல்லா மனிதரின் அகப்புற வாழ்வுகளின் முரண்பாட்டை இது நன்கு சித்திரித்துள்ளது என்னலாம். தனி மனிதர் வாழ்வில் அவாவிய இன்பங்கள் துன்பங்களாவதற்கும், பல சமயம் இனவாழ்வு வளங்கெடுவதற்கும் உரிய அடிப்படைக் காரணம் இத்தகைய முரண்பாடே

என்னலாம்.

குதிரைவண்டிக்காரன் வண்டியை ஒரு திசையில் ஓட்ட விரும்பும்போது, குதிரை வேறொரு திசையில் செல்ல விரும்பி அடம்பிடிப்பது நாம் காணாத காட்சியன்று. வண்டிக்காரன் அச்சமயம் ஆத்திரம் காட்டினாலோ அல்லது கோபம் கொண்டு அடித்தாலோ, குதிரையின் சண்டித்தனம் ஒன்றுக்கு இரண்டாகுமே யன்றிக் குறையாது. அறிவும் அனுபவமும் உடைய குதிரைக்காரன் குதிரையின் மனப்போக்கறிந்து, அப்போக்குக்குப் பாதி விட்டுக்கொடுத்து அதன் பின்னும் தட்டிக்கொடுத்தே தன்வழிக்குத் திருப்புவான். வாழ்வில் தனி மனிதனுக்கும் இனவாழ்வுக்கும் இடையேயுள்ள தொடர்பு குதிரைக்கும் குதிரைக்காரனுக்கும் உள்ள இந்தத் தொடர்பு போன்றதேயாகும்.

திறமையுடைய ஆட்சியாளர் வலிந்து மக்களைத் தம்

வழிக்குத் திருப்ப முயலமாட்டார்கள். வலிமையால் மக்களை அடக்க முடிந்தால்கூட, அதனால் ஆட்சி பயனுடைய ஆட்சியாய் அமையாது. ஏனெனில் ஆட்சியின் வெற்றி மக்கள் செயலில் இல்லை; சொல்லில் இல்லை. அவர்கள் கருத்தில், அவாவில், ஆர்வத்திலேயே இருக்கிறது. தம் செயலை மக்கள் செயலாக ஆக்கவல்ல-இன்னும் சிறப்பாக, தம் ஆர்வத்தையே மக்கள் ஆர்வமாக மாற்றியமைக்கும் திறமுடைய-மக்கள் ஆர்வம் தூண்டி