உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

அப்பாத்துரையம் - 15

அதைத்தம் ஆற்றலாக்கிக் கொண்ட ஆட்சியே அத்தகு வெற்றிகாண முடியும். புறஆட்சியாளர் முறை இதுவானால், இனத்தின் அக ஆட்சியாளராகிய இனமுதல்வர் முறை இதனினும் அரியதாய் இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. அவர்கள் ஆட்சி உரிமையாட்சியாய் இராமல், வலிமை நாடிய ஆட்சியாய் இல்லாமல், அன்பாட்சியாகவே அமைவது, இவ்வகையில் பெரும் பயனுடையதாகும். ஏனெனில் அவர்கள் ஏ மக்கள் அவா வழி அவர்கள் ஆர்வம் பெருக்கி விடுகின்றனர். அவ்வவாக்கள், ஆர்வங்கள் ஆகியவற்றையே தம் னக் குறிக்கோள்வழி திருப்பிவிடுகின்றனர். இந்த ஆர்வங்களால் மக்கள் நாடிய வளமேயன்றி அவர்கள் நாடாத வளமும் அளித்து, அவர்கள் அக உள்ளத்தையே ஆட்கொண்டு இன வாழ்வில் அவர்களை இயக்குகின்றனர்.

அவா

திருவள்ளுவர் நாட்டின் புறஆட்சியை இனமுதற் குழுவினர் அகஆட்சி வழிநிற்பதாகவே கொண்டார். இதனாலேயே அது நாடும் வளம் மட்டுமன்றி, நாடாவளமும் தருவதென விதந்துரைத்தார்.

'நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல நாட வளந்தரும் நாடு'

இங்ஙனமாக இந்த நாட்டு ஆட்சி விளக்கம் 'நாடு' என்பதன் தமிழ்ச்சொற் பொருள் விளக்கமாகவும் அமைகிறது.

தனிமனித அவாநோக்கம், இனக்குறிக்கோள் ஆகியவற்றின் இணைவே பண்பு, அதன் பரப்பே பண்பாடு. அதன் புறவாழ்க்கைப் படிவே வே நாகரிகம். வாழ்வில் அது பரப்பும் இன்னலைகளே பண்புநயம் அல்லது நயத்தக்க நாகரிகம்.

பண்பு உணர்ச்சியில் தளிர்க்கிறது. அறிவில் மலர்கிறது. உணர்வில் கனிவுறுகிறது. அது குடும்பத்தில் தழைக்கிறது. சமுதாயத்தில் படர்கிறது. இனமுதல் குழுவில் செறிந்த உயிருருப் பெற்ற இனவாழ்வு ஆகிறது.

பண்பு குடும்பச் சூழலில் அன்பாகவும், பாசமாகவும் செயலாற்றுகிறது. சமுதாய வாழ்வில் நேசமாகவும், நேர்மை யாகவும் ஒப்புரவாகவும் படர்கிறது. குடும்பத்தையும்,