உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

187

சமுதாயத்தையும், இனத்தையும் இயக்கம் இன முதல் வாழ்வில் அஃது அருளாகவும், அன்புத் தன்மறுப்பாகவும், மொழி, கலை, இயல்நூல்கள், சமுதாய சமய அரசியல் அமைதியின் மூலப் பண்பு மரபுகளாகவும் வேரூன்றிப் பெருக்கமுறுகிறது.

தனி உயிரின் அவா இன்பமே நாடுகிறது. ஆனால், அஃது எப்போதும் இன்பம் அடைவதில்லை. இன்பம் எய்தினாலும் அஃது எப்போதும் நிலையான இன்பமாய் இருப்பதில்லை. பல சமயம் மாய இன்பத் தோற்றமுடைய துன்பமாகவும் அமைகிறது. இஃது ஏன்?

இனங்களும் சமுதாயமும் எப்போதும் எங்கும் வளர்ச்சி யடைய வேண்டும். தழைக்கவேண்டும் என்பதில்லை. வளர்ச்சி குன்றி அலைக்கழியும் இனங்களும், தளர்ச்சியுற்று நலியும்

னங்களும் உண்டு. தம் பண்பின் அழிபாட்டைப் பிற இனங்களுக்கு உரிமையாக விட்டுவிட்டுத் தடமழிந்துபோன இனங்கள்கூட உண்டு. பண்பிலும் கலையிலும் நாகரிகத்திலும் சிறந்த சுமேரிய, எகிப்திய, கிரேக்க, உரோம நாகரிகங்கள்கூட இந் நிலைக்கு ஆளாயின. இதன் விளக்கம் யாது?

பண்பு உணர்ச்சியினின்றும், அறிவினின்றும் தோன்றி இன உணர்வு நோக்கி வளர்வது. ஆனால், அது இன உணர்வுப் படிவரை எப்போதும் சென்றெட்டுவதில்லை; எட்டுமுன்போ, எட்டிய பின்னோகூட அது மேலும் வளராமல் நின்றுவிட்டால், அஃது அழிந்துபடவே நேரும். ஏனென்றால் ‘வளர்ச்சி நின்றால் தளர்ச்சி, அழிவின் தொடக்கம்' என்பது உயிரியக்கத்தின் நியதி. வளர்ச்சியுற்ற நிலை என்பதோ, நிறைவு பெற்ற நிலை என்பதோ அதன் அமைதிக்குப் புறம்பானது. வளர்ச்சியின் நிறைநிலையில் புதுவளர்ச்சித் தொடக்கத்துக்குரிய ஓய்வு நிலை அல்லது இனத்துயில் நிலை கண்ட இனங்கள் மட்டுமே இதற்கு விலக்கு ஆகும்.

தமிழ் இனம் இத்தகைய துயில்நிலை கண்ட இனம் மட்டுமல்ல, கண்டுவரும் இனம், பிற இனங்கள் தாண்டி அது வாழ்வதன் மறைதிறவு இதுவே, மூவாயிர நாலாயிர ஆண்டு களாக நீடித்துவரும் அதன் துயில் நிலையில் இனத்தாயாகிய வள்ளுவரின் குரல்-திருக்குறளின் முப்பால் சை-அதனைத்