உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

191

பொதுநல அவா இங்ஙனம் அவாவின் உயிர்த் தன்மை மட்டும் உடையதாய், அதன் நச்சுச் சுழற் பண்பற்றதாய் இலங்குகின்றது. அதையே வள்ளுவர் பெருமான் அவாவடக்கம், அவாவற்ற நிலை, பிறப்பிறப்புக் கடந்த நிலை, கடவுள் நிலை என்று கருதினார்.

தன்னல அவா பொதுநல அமைதிகளுடன் பண்பாக இயன்ற இடத்திலன்றி. தனி உயிர் இன்பங்கூடத் தருதல் அரிது. அது தரும் தற்காலிக இன்பங்கூடப் பொதுநலப் பண்புடன் அது இணைந்ததனாலன்றி வேறன்று. இன்பத்தின் இம் மறைதிறவு அறியாதவர், இன்பத்தின் இவ்வுயிர்முதல் காணாதவர், தன்னல அவாக்களில் உழன்று, அவாவிய அவா நிறைவேறப் பெறாது உழல்வர்.

முயற்சியுடைவர்க்குக்கூட, தன்னல அவா அம் முயற்சியினளவே வெற்றி தரும். தனி மனிதன் முயற்சி சிறு முயற்சியாதலால், அது தரும் வெற்றியும் சிறிது நேர்மாறாகப் பொதுநல முயற்சி அளவில் சிறிதாயினும், பெரிதாயினும், அலைஎதிர் அலையாக இனமுழுதும் தனி உயிர்களின் எண் கடந்து, இடங் கடந்து, காலங் கடந்து செயலாற்றுவதால், அஃது எல்லையற்ற - நிறைந்த நீடுபயனுடையதாகின்றது. அஃது இனநலத்தை மட்டுமன்றித் தனிநலத்தையும் நிலையாக உண்டுபண்ணுவது. சில இடங்களில் தனிநலன் பயவாதது போலத் தோன்றுவது போலித் தோற்றமே. ஏனெனில், மனநிறைவு தனி உயிர்க்கு உடனடிப் பயனாகவே கிடைக்கிறது. இஃது அவாவால் பெறமுடியாத பயன். புகழும் உடனடியாகக் கிடைக்கிறது.ஏனெனில், உண்மையான புகழ், வள்ளுவர் கருதிய புகழ், இனப்பயனே. உலகின் புறப்புகழ்கூட அதன் புறப்பயனாக, இவற்றின் மிகையாக வந்தடைவதேயாகும்.

மனநிறைவு, அவாவின்மை, இன்பதுன்ப நடுநிலை ஆகிய பண்புகளை வள்ளுவரும் போற்றுகின்றார்; இடைக்கால, L பிற்காலச் சமயவாணரும், மற்ற உலக அறநூலாரும் போற்றக் காண்கிறோம். ஆனால், வள்ளுவர் சொல்மரபை இவர்கள் அனைவரும் பேணுகின்றனரேயன்றி, அவர் பொருள்மரபை மறந்துவிடுகின்றனர். அதற்குத் தற்கால உலகின் உணர்ச்சி நிலையிலிருந்தே சான்றுகள் காணலாம்.