(220
அப்பாத்துரையம் 15
-
ஒப்புக்கொள்வார்கள். ஆனால், எல்லா இன்பமும் இனச்சார் புடையதே என்பது மேலீடாக எளிதில் தோற்று வதில்லை. சிறப்பாக, செல்வத்திலும் ஆதிக்கத்திலும் நாட்டம் உடையவர் வாழ்வில் இனப்பாசம் இடம்பெறுவது எவ்வாறு என்று எவரும் கேட்கத்துணிவர். ஆனால், மேல்திசை அருளாளரான கார்லைல், இரஸ்கின், டால்ஸ்டாய் ஆகியோர் இலக்கியப் பண்புகள் முழுவதும் இதனை வலியுறுத்திப் பலவகை விளக்கங்கள் தர முயன்றுள்ளன.மனிதப் பண்புடன் தொடர்பற்ற நிலையில் செல்வ இயலும், அரசியலும் ஆய்ந்த மேலை ஆராய்ச்சியாளர் சூழலில், இதனை வலியுறுத்தும் தேவை அவர்கட்கு மிகுதி ஏற்பட்டது. அவர்கள் வலியுறுத்திய பின்கூட, மேலையுலகமும் அதைப் பின்பற்றித் தற்கால நாகரிக உலகமும் அவ்வுண்மையை இன்னும் காணாது உழன்றே வருகின்றது என்னலாம். ஏனெனில், அவ்வருளாளர் உரைகள் இலக்கிய அழகுரைகளாக, சமயப் புனைவான உயர்வு நவிற்சியுரை களாகக் கொள்ளப்பட்டு வருகின்றனவேயன்றி ஆய்வுரைகளாக மதிக்கப்படு வதில்லை. கீழ்த்திசையில் காந்தியடிகளின் கோட்பாடுகளும் இதுபோலவே உயர் சமய உரையாக ஒதுக்கப்படுகின்றதேயன்றி வாய்மை யுரையாக உணரப்படவில்லை.
செல்வத்தையும், வறுமையையும் மேலைச் செல்வநூலார் இயல் ஆராய்ச்சிகளோடொப்ப உயிரிலா இயற்கையாற்றல் களாகவே ஆய்ந்துள்ளனர். இது முற்றிலும் சரியன்று. அத் துறை உயிர்நூல், சமுதாய நூல்களுடன் தொடர்புபடுத்தியே ஆராயப்படுதல் வேண்டும்.
செல்வமும் வறுமையும் மனித இனத்துக்கு மட்டுமே உண்டு. விலங்கு பறவை உயிரினங்களுக்குக்கிடையா. இவை மனிதர் செயற்கையாக வளர்த்துக்கொண்ட சமுதாயப் பண்புகள் என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது.
விலங்கு, பறவை முதலிய உயிரினங்களுக்குச் செல்வம் என்பது இயற்கை வளமும் தம் சூழல் வாய்ப்பு மன்றி வேறன்று. வறுமை என்பதும் இவற்றின் குறையன்றி வேறாகாது. மனித சமுதாயத்திலே இயற்கை வளத்துக்கும் தனி மனிதனுக்கும் அதாவது நுகர்பவனுக்கும் இடையே சமுதாயம் ‘செல்வம்' என்ற தடையாணை எழுப்பியுள்ளது. இயற்கை வளத்தைத் தனி
க