இன்பத்துள் இன்பம்
219
தெளிவு. அவர்கள் பெறும் இன்பம் மக்கள் நலன் அல்லது அகப்புகழேயாகும்.
அன்பு இயல்பாக உடையவரே 'சிறப்பாக' இன்பம் உடையவர் என்பதையும் வள்ளுவரே வலியுறுத்தியுள்ளார்.
'அன்புற் றமர்ந்த வழக்கென்ப, வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு'
இந்த இன்பம், இந்த அகப்புகழ் இன இன்பமே. அதுவே இறவாப் பிறவா இன்பம், பேரின்பம், அதுவே இறைப்பண்பு. சிறப்பென்னும் சொல் இக்குறட் பாவில் ன்பத்தைக் குறித்த அடைமொழியாகக் கூறப்பட்டுள்ளது. இதே சொல்லைப் பேரின்பத்தைக் குறிக்கும் சுட்டாகப் பிறிதொரு குறட்பா கையாண்டுள்ளது.
'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு.'
தனிமனிதன் இன்பம் தனிமனிதனைச் சார்ந்ததன்று, அது தனிமனிதன் கடந்த அகப்பண்பு என்பதை அனுபவ வாயிலாகவே காணலாம். இன்பத்தை ஒருவன் மற்றொருவனுடன் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த இன்பம் பாதியாவதில்லை. இருமடங்கு பன்மடங்கு பெருக்கமுறுகிறது. அதே சமயம் துன்பம் அவ்வாறு பகிரப்படும் சமயம் அது தன் பாதியளவிலல்ல, பேரளவிலேயே குறைகிறது. உண்மையில் அன்புடையாருடன் பங்கு கொள்ளும் துன்பம், துன்பத்தில் ஆறுதல் தரும் அரையின்பம் ஆகிறது. பிறர்க்காக ஏற்கும் துன்பமோ, அன்பை எதிர்பாராமல், அன்பைப் பரப்பி வழங்கி ஏற்கப் படுவதாகலின், இன்னும் பெரிதான, எல்லையற்ற இன்பம் அளிக்கிறது. துயர் நாடகங்களில், உயர்வீறுடைய பண்பாளர்படும் துன்பம்-அழிவுகூட காண்பவர்க்குச் சிறுதிற-இன்ப துன்பங் கடந்த ஓர் உயர் அமைதி தருதல் இதனாலேயேயாகும். பாரிய கலையமைதியுடைய கட்டடங்களைக் கண்டு களிப்பவர் அடையும் வீறமைதியுடன் இது ஒப்புடையது. பேரின்பத்தின் ஒரு சாயலே இஃது என்னலாம்.
ய
குடும்ப இன்பமும், சமுதாய இன்பங்களும், அருளாளர் இன்பமும் இனச்சார்புடையவை என்பதைப் பலர் எளிதில்