||--
218) ||-
அப்பாத்துரையம் - 15
உயிர்களும் மனிதனும் பொதுவாகத் தத்தமக்கென்றே இன்பக் கருவிகளையும் இன்பத்தையும் நாடுவது இயல்பு. ஆனால், இயற்கை இன்பத்தை இனவாழ்விலேயே புதைத்து வைத்திருக் கிறது. தமிழர் இன்பத்தின் இந்த நுட்பத்தை மிகப் பழங்காலத் திலேயே கண்டுணர்ந்திருத்தல் வேண்டும். இன்பம், இனம் என்ற சொற்களின் தொடர்பு இதைக் காட்டுகிறது. ஆனால், திருவள்ளுவர் அரியதோர் இயற்கை உயிருவமை கண்டு அதன் மூலம் இவ்வுண்மையை விளக்குகிறார், அடிக்கடி
வலியுறுத்துகிறார்.
'அன்போ டியைந்த வழக்கென்ப, ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு’
‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!'
இங்கே இரண்டு குறட்பாக்களிலும் ‘என்பு' என்பதை ஆகுபெயராக ‘உடல்' என்ற பொருளுடையதாக உரையாசிரியர்கள் கொண்டுள்ளனர். ஆனால், முதல் குறட்பாவில் உயிர்க்கு என்பது உடலோடுகூடிய உயிர்க்கு அல்லது உயிரினத்துக்கு என்றே நேர்மையாகப் பொருள்படுவது. என்போடியைந்த தொடர்பு உயிருக்கு அன்று, உடலில் எலும்புகள் இணைந்த தசைக்கே. உயிரினத் துக்கு அன்புடன் கூடிய இணைவு உயிரினத்தின் உடலில் எலும்பும் தசையும் கூடிய இடையறா இணைவு போன்றது என்பதே கருத்து. இரண்டாவது குறளில் ‘என்பு' என்பதனுடன் வரும் 'உம்'மை உயர்வு சிறப்பும்மை. அன்புடையவர் எல்லாமே உடம்புகூட, எலும்புகூடப் பிறர்க்கே உரியதாகக் கொண்டு வாழ்வர் என்று அது பொருள்படும்.
,
எலும்பு உள்ளுடற் பகுதி. தசையழிந்த பின்னும் நீடித்து நிற்பது. இடுகாட்டில் மண்ணுண்ட பின்னும், சுடுகாட்டில் எரியுண்ட பின்னும் மீந்து நிற்கும் பகுதியும் அதுவே. தோல், தசை, குருதி, மூளை மட்டுமல்ல, எலும்புகூடப் பிறர்க்குரித்தாக்கி வாழ்வர் மேலோர்! உயர்வு சிறப்பு உம்மையின் தனித்திறம் இதுவே.
பிறர்க்காக வாழ்பவர், தம் உடம்பும் பிறர்க்கு உரிமைப்படுத்துபவர் நாடும் புகழ் புறப்புகழ் அன்று என்பது