உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இன்பத்துள் இன்பம்

(241

குறிக்கோளையும் பொறுத்தவை. குறிக்கோள்கள் எத்தனையோ அத்தனை பண்புகளும், அத்தனை உலகங்களும் மனித உலக வாழ்வின் அகக்கூறுகளாக இயங்குகின்றன. வாழ்க்கையின் எல்லா வகைப் புதிர்களுக்கும் மூலக் காரணம் இதுவே. உலகம் ஒன்று. ஆனால், ஒருவர் காணும் உலகை மற்றொருவர் காண்பதில்லை. இருவரும் ஒரே உலகின் இருவேறு பட்ட பண்புக் கூறுகளையே காண்கின்றனர்!

'உலகம் ஒரு போர்க்களம். வாழ்க்கை ஒரு போராட்டம். அதில் ஒவ்வொரு தனி மனிதனும் பிற தனிமனிதனுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் போராடுகிறான். இவ்விசித்திரப் போர்க்களத்தின் விசித்திரப் போராட்டத்தில், ஒவ்வொருவன் பார்வையிலும் அவன் ஒரு கட்சி, மற்ற எல்லாரும் எதிர்க்கட்சி. பலரை உடன் சேர்த்து ஓரினத்தவராகக் கூறுவதுகூட உண்மையில் எதிரிகளைப் பிரித்துப் பிளவுசெய்து வெற்றிகரமாக வென்று தன்னலம் பெருக்கும் பொருட்டே'

தன்னலப் போட்டியைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் காணும் உலகம், வாழும் உலகம் இதுவே.

'உலகம் ஒரு சூதாட்டக் களம்; வாழ்க்கை ஒரே சூதாட்டம். தில் ஒவ்வொருவரும் பிறரை வஞ்சித்துத் தாம் மேம்படப்பல வகைமுறைகள், வழிவகைகள் தேடுகின்றனர். அறிவுடையவன் தில் பிறரை ஏய்த்து வாழ்வான்; அறிவற்றவன் ஏய்ப்புண்டு மாள்வான்'.

தன்னல நயவஞ்சகர், திருடர், கொள்ளைக்காரர், ஆகியவர்கள் அகநோக்கு உலகம் இதுவே. பல கீழ்த்தர அரசியலறிஞர்கள், சமய அறிஞர்கள் நோக்கு இதன் உயர் தளச் சமுதாய நிழலேயாகும்.

'உலகம் ஒரு வேட்டைக்காடு. அதில் ஆற்றலுடையோர் தங்கு தடையின்றி ஆதிக்கம் செலுத்தி அல்லது இன்பம் நாடிப் பெருமையுறுவர். அதை நாடாத சிற்றுயிர்கள், நாடியும் ஆற்றலில் குன்றிய ஏலாதவர் அவ்வாதிக்க வேட்டை அல்லது இன்ப வேட்டைக்குரிய வேட்டை இரையும் வேட்டைக்களமும் ஆவர்.'

இவ்வாறு கூறுபவரை, எண்ணுவதாகத் தெரிவிப்பவரைக் காணமுடியாது. ஆனால், இவ்வாறு எண்ணுபவர், செயல்