உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

அப்பாத்துரையம் - 16

ஆகியவர்களை வென்றடக்கியிருந்தான் (பட். பா. 247-277). பொதுவர் மரபையே அழித்தான். இருங்கோவேளை முறியடித்தான் (பட். பா. 282-3). உறையூர்க் கோட்டை கட்டிப் புதுப்பித்தான்; ஏரி, குளம் வெட்டி உழவு பெருக்கி, புதுக்குடியிருப்புகளும் கோயிலும் வகுத்தான் (பட். பா. 284-6). வெண்ணிப்போர் ஆற்றினான் (பொருநர்,143-148).

மூன்றாம் வெண்ணிப்போர் பற்றிப் பொருநர் ஆற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியார் குறிக்கும் அடிகளாவன. "இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்

ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த

இருபெரு வேந்தரும் ஒருகளத்தவிய

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்

கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்

(பொருநர். 143-148)

இங்கே கரிகால் வளவன் பனம்பூமாலை அணிந்த சேர வேந்தனையும், வேப்பம் பூமாலையணிந்த பாண்டிய வேந்தனை யும் ஒருங்கே எதிர்த்துப் போர் நிகழ்த்தினான். இருபெரு வேந்தர் களும் முறிவுற்றதன்றி, களத்திலேயே பட்டு வீழ்ந்தனர். இதன் பின்னரே கரிகாலன் தமிழகப் பேரரசன் ஆகியிருக்க வேண்டும்.

கரிகாலன் வடநாட்டு வெற்றி

கரிகாலன் வடநாட்டு வெற்றி பற்றிக் குறிக்கும் நூல் சிலப்பதி காரமேயாகும். இது காரணமாக, அதை வரலாற்று மெய்ம்மை யுடையதன்று எனக் கருதுபவர் உண்டு. சிலப்பதிகாரம் சங்க காலத்து நூலல்ல என்றும், அது வரலாற்று நிகழ்ச்சிகள் விரவிய ஒரு புனைகதையே என்றும் பலவாறாக ஆராயப்புகுபவர் உண்டு. ஆனால், உண்மையில் இது சங்ககால வரலாற்று மரபு முற்றிலும் காணமுடியாத நிலையில் பிற்காலத்தாரும் நம் காலத்தவரும் கொள்ளும் குளறுபடியின் விளைவேயன்றி வேறல்ல. ஏனெனில் பத்துப் பாட்டினுள்ளேயே பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடும் மூன்றாம் வெண்ணிப்போரை அதே அரசனை விரிவாகப் பாடும் பட்டினப்பாலை குறிப்பிடவில்லை என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. பாடுவேள் காலத்துக்குப்பின் சில செயல்கள் நிகழ்ந்