உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

81

திருக்கக் கூடும் என்பதும், அக்காலப் புலவர்களிடையே வரலாற்று நோக்குப் பொதுவாக மிகுதியாயினும், மாமூலனார், பரணர், இளங்கோ ஆகியவரிடையேதான் அது முனைப்பாகக் காணப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க செய்திகள் ஆகும். பொதுவான சங்க ஏடுகளைவிடச் சிலப்பதிகார மணிமேகலைக் காவியங்கள் வரலாற்று முக்கியத்துவம் குறைந்தவையல்ல -ஆம், முக்கியத்துவம் இன்னும் முனைப்பாக உள்ளவையே என்பதை வருங்கால ஆராய்ச்சிகள் கட்டாயம் காட்டும். சங்க காலத்தை அறுதியிட இன்று பல செய்திகள் உதவுகின்றனவாயினும், முதல் முதல் உதவியவை சிலப்பதிகார மணிமேகலைகளே என்பதும், இன்னும் அதை வலியுறுத்த மணிமேகலை பெரிதும் காரணமாய் உள்ளது என்பதும் மறக்கத்தக்க செய்திகளல்ல.

கரிகாலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றிச் சிலப் பதிகாரம் தரும் சித்திரங்கள் வழக்கப்படி இளங்கோவுக்குரிய சுருக்கி விளக்கும் ஆற்றல் சார்ந்தவையாகும்.

"இருநில மருங்கில் பொருநரைப் பெறா அச்

செருவெங்காதலின் திருமாவளவன்...

புண்ணியத் திசைமுகம் பொக்கிய அந்நாள்.... இமையவர் உறையும் இமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையில் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிரநாட்டுக்

கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்; மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தள் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்; அவந்திவேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந் தோங்குமரபின் தோரண வாயிலும்’

99

ஆனால்,, இங்கே வெற்றியின் விளைவுகள் கூறப்படுகின்றன வேயன்றி, வெற்றிகள் வருணிக்கப்படவில்லை. தென்னாட்டில் எவருடனும் போர் செய்யும் வாய்ப்புக்கிடையாமல் தோள்தின வெடுத்ததனாலேயே கரிகாலன் வடதிசை சென்றதாக இங்கே கூறப்படுகிறது. இமயத்தின் நெற்றி அல்லது முன்புறமும் பிடர் அல்லது பின்புறமும் அவன் புலிப்பொறி நாட்டினான். மீளும்