உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

||--

அப்பாத்துரையம் - 16

தோல்வியடைந்தான். தவிர, பாட்டின் இறுதியடி கோக்கோதை மார்பன் என்ற சேரனைச் சுட்டுவதுபோலக் காணப்படுகிறது. சேரன் இப்போரில் பாண்டியன் நண்பனாக இருந்திருத்தல் கூடும். தலையாலங்கானத்துப் போரில் அவன் சோழனுக்கு

உதவியாயிருந்தான் என்று அறிகிறோம்.

பழயன் மாறன் இப்போரில் கிள்ளி வளவனை முறியடித்த துடன் அவனிடமிருந்து யானைகள், குதிரைகள் பலவற்றைக் கைக்கொண்டான் என்று அறிகிறோம்.

இப்போர் பற்றி நக்கீரர் பாடும்பாடல் வருமாறு:-

“இழையணி யானைப் பழயன் மாறன்

மாடமலி மறுகில் கூடல் ஆங்கண்

வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த

கிள்ளிவளவன் நல்லமர் சாஅய்க்

கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி

ஏதில் மன்னர் ஊர்கொளக்

கோதைமார்பன் உவகையிற் பெரிதே!'

(அகம் 346)

இங்கே கோதை மார்பன் என்று குறிக்கப்படுபவன் அப்போது சிறுவனாயிருந்த பின்னாளைய தலையாலங் கானத்துப் பாண்டியனே என்றும் சிலர் கருதியுள்ளனர். இதுவும் ஆராய்தற் குரியதே.

தலையாலங்கானத்துப் போர்

தலையாலங்கானம் என்பது, சோழநாட்டில் தற்காலத் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலம் வட்டத்திலுள்ள ஓர் ஊர். பிற்காலங்களில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று. தேவார காலங்களில் இது திருநாவுக்கரசரால் பாடப்பட்டுச் சிவநெறிக்குரிய ஒரு திருப்பதியாயிற்று.

சங்க இலக்கியகாலப் போர்களில் தலைசிறந்த பெரும் புகழ்ப்போர் தலையாலங்கானத்துப் போரேயாகும். அப்போரின் புகழில் ஈடுபட்டு, அதன் வியத்தகு வீரக்காட்சிகளையும், அதன் பேராரவாரத்தையும், அதன்பின் ஏற்பட்ட அமளிகுமளிகளையும் கண்டும் கேட்டும் அவற்றை வருணனைகளாகவோ உவமை,