உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

121

அடைமொழிகள் வாயிலாகவோ எடுத்தாளாத புலவர் அந்நாளில் இல்லை என்னலாம். இப்போரின் வெற்றி வீரனான பெரும் பாண்டியன் மீதே அந்நாளைய தலைசிறந்த புலவர் களான நக்கீரரும் மாங்குடி மருதனாரும் சிறு பெருங் காப்பியங்கள் என்று கூறத்தக்க நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய பெரும் பாடல்களைப் பாடியுள்ளனர். தவிர அப்போரையும், போர்வலவனான வழுதியையும் பாடிய பிற புலவர்களின் தொகையும் ஏராளம்.

அரசுரிமை பெறும் சமயம் (இரண்டாம்) நெடுஞ்செழியன் வயதுவராத முதிரா இளைஞனாயிருந்தான்.பாண்டி நாட்டைக் கைப்பற்றிவிட இதுவே தருணம் என்று மற்ற அரசர்கள் எண்ணி னார்கள். அவர்கள் ஒருவர் இருவராகத் தாக்கவில்லை. இரண்டு பேரரசர்களும், ஐந்து வேளிர்களும் சேர்ந்து ஒருங்கு திரண்டு தாக்கினார்கள். எதிர்த்த வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியவர்கள், பேரரசருள் இப்போரிலீடுபட்ட சேரன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று அறிகிறோம். போரில் ஈடுபட்ட சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி என்று சிலர் கருதியுள்ளனர். ஆனால், இது பொருத்தமற்றது. அவன் கிள்ளி வளவனாகவே இருத்தல் வேண்டும் என்று கூறலாம். ஏனெனில், தலையாலங்கானத்துக்கு முற்பட்ட கூடற்பறந்தலைப் போர் அவன் முயற்சி யேயாகும்.

தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் என்று இப்போர்க் களத்தைப் புலவர் குடபுலவியனார் (புறம் 19) வருணித்துள்ளார். தமிழகத்து வீரமுழுவதுமே போரில் ஈடுபட்டிருந்தது என்பதையும்; இருபக்கத்தும் தமிழர்களே நிறைந்திருந்தாலும், எருமையூரன் போன்ற வடுகரின் படைகளும் இடைகலந்திருந்தன என்பதையும் இது நினைவூட்டுகிறது. இத்தனை அரசர் பாண்டியரை எதிர்க்க ஒன்றுபட்டாலும் போர் நடைபெற்ற இடம் பாண்டிய நாடன்று, சோணாடே என்பது குறிப்பிடத் தக்கது.சோழனே கூட்டுறவின் இயக்கும் உறுப்பாகவும் தலைமை உறுப்பாகவும் இருந்தான் என்பதில் ஐயமில்லை படைதிரண்டு வருவதறிந்து பாண்டியன் முன்னேறிச் சென்று சோணாட்டில் தலையாலங்கானத்தருகே எதிரிகளைத் தாக்கியிருக்கக்கூடும்;