உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

||– –

சங்கப்பாடல்கள்

அப்பாத்துரையம் - 16

மூலம் நாம் கிள்ளிவளவனின்

திருக்கோவ லூர் வெற்றியையும் அவன் கருவூர் முற்றுகையையும் பற்றிக் கேள்விப்படுகிறோம். மணிமேகலையின் மூலம் அவனது இரண்டாம் காரியாற்றுப் போர் பற்றிய விவரம் காண்கிறோம். இவை ஒருங்கு சேர, அவனுக்கு மீண்டும் தமிழக வெற்றி உறுதியாதல் குறிப்பிடத்தக்கது.

ம்

மலையமான்காரி தென்னார்க்காட்டு மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் கரையிலுள்ள திருக்கோவிலில் இருந்து ஆண்டவன். முள்ளூர் மலைப்பகுதியும் அவன் ஆட்சிக்கு உட் பட்டிருந்தது. சோழன் ஆரியப் படையெடுப்பை வல்லத்துப் போரில் வென்றதுபோலவே, காரியின் முன்னோரும் இம் முள்ளூர் மலையருகே நடந்த போரில் ஆரியரை வென்றதாக அறிகிறோம். நெடுங்கிள்ளிக்கோ அல்லது சோழரின் வேறு எந்த எதிரிக்கோ உதவிய காரணத்தினாலேயே, கிள்ளிவளவன் காரியை எதிர்த்திருக்கவேண்டும். காரி இப்போரில் கொல்லப் பட்டான். அவன் சிறுவர் இருவரைக் கிள்ளிவளவன் யானைக் காலிலிட்டு இடறி அழிக்கும்படி கட்டளையிட்டான்; ஆனால், கோவூர்கிழார் என்ற புலவர் (புறம் 46) அரசனிடம் சோழ மரபின் பெருமையையும், காரி மரபின் வள்ளன்மையையும் எடுத்துரைத்து இதைத் தடுத்தார்.

கிள்ளிவளவனின் அடுத்த செயல் கருவூர் முற்றுகையேயாகும். மலையமானை வென்றபின் அவன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து வென்றான். பின் கொங்கு நாடு கடந்து சேர நாட்டின் தலைநகரான கருவூரை முற்றுகையிட்டான். சேரமான் கோட்டைக்குள் புகுந்து தற்காப்பிலே கவனம் செலுத்தினான்; வெளியிலுள்ள காவல் மரத்தைச் சோழன் வெட்டும் ஓசை கேட்டும் அவன் வெளிவராதிருந்தான்; சோழன் சுற்றுப்புறம் உள்ள ஊர்களும் கழனிகளும் பூங்காக்களும் ம் எரித்துப் பாழாக்க முனைந்தான்; அப்போது அவனுடன் இருந்த புலவர் ஆலத்தூர் கிழார் அவனுக்கு அறிவுரை கூறினார். "புறாவின் இன்னலை விலக்கிய சிபிச் சோழன் மரபில் வந்தவன் நீ! வீரமின்றி ஒதுங்கி வாழும் இவ் அரசனை எதிர்ப்பதும் அதற்காக அழிவு சூழ்வதும் உனக்கு நன்றன்று" (புறம் 36) என்று உரைத்தார்.