உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

131

இறுதியில் சோழன் வஞ்சி முற்றுகையில் வெற்றி பெற்றான். இவ்வெற்றியைப் பெண்பாற்புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இரண்டு பாட்டுகளில் (புறம்: 37, 39) சிறப்பித்துள்ளார்.

காரியாற்றுப் போர் II

கிள்ளிவளவன் அல்லது மாவண் கிள்ளியின் ஆட்சியின் பிற்பகுதியில் சேரரும் பாண்டியரும் மண்ணாசையால் உந்தப்பட்டுச் சோழ நாட்டின் மீது படையெடுத்தனரென்றும், சோழன் தம்பியால் காரியாற்றில் மாற்றரசர் இருவரும் முற்றிலும் முறியடிக்கப்பட்டனரென்றும் மணிமேகலைக் காப்பியம் நமக்குத்

தெரிவிக்கிறது.

முதற் காரியாற்றுப் போரைப்போலவே இப்போரும் தமிழக வடஎல்லையிலேயே நடைபெற்றது என்பது வியப்புக் குரியது. ஏனெனில் எதிரிகள் இருவருள் பாண்டியன் தென்திசை யிலும் சேரன் மேல் திசையிலும் இருந்தனர். சோழன் தமிழகத்தில் அடைந்துவரும் முதன்மையை வடபுல அரசருடன் சேர்ந்தேனும் சேர பாண்டியர் ஒடுக்க நினைத்திருத்தல் கூடும் என்பதே பொருத்தமாகத் தோற்றுகிறது.

எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப வஞ்சியினிருந்து வஞ்சி சூடி

முறஞ்செவி யானையும் தேரும்மாவும்

மறங்கெழு வயவாள் வயவரும் மிடைந்த

தளைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்

சிலைக்கயல் நெடுங்கொடி நெடுவேல் தடக்கை

ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்

காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை

வலிகெழுதடக்கை மாவண்கிள்ளி!

குளமுற்றத்துப் போர்

(மணிமேகலை XIX 119 - 127)

இரண்டாம் காரியாற்றுப் போருக்குப் பின் கிள்ளிவளவன் பாண்டியரையும் சேரரையும் அவர்கள் நாட்டுக்குத் துரத்திச் சென்றிருக்க வேண்டும். சேர நாட்டில் குளமுற்றம் என்ற