உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

|| - -

அப்பாத்துரையம் - 16

அது அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது என்று அறிகிறோம். ஆய்வேளின் சங்ககாலத் தலைநகருக்கு அண்மையிலேயே அது இருந்ததனால், அவ்விடத்தின் பெயரால் புகழ் அடைந்துள்ள போர் அவனை எதிர்த்து ஆற்றப்பட்ட போராய் இருத்தல் இயல்பே என்னலாம்.

செங்கோடு, புதான்கோடு ஆகிய இ டங்கள் எங்கே இருந்தன என்று அறியக்கூடவில்லை. ஆனால், தென் று திருவாங்கூர் - திருநெல்வேலி மாவட்ட இணைப்பாய் இயலும் செங்கோட்டையையும் அதங்கோடு முதலிய தென்திருவாங்கூர்ப் பழம்பதிகளையும் அவை, நினைவூட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. அவை, ஆய்வேள் நாட்டின் பகுதிகளாகவே இருந்திருத்தல் கூடும். அதங்கோடு என்பது நாகர்கோவிலை யடுத்த திருவதங்கோடு அல்லது திருவாங்கோடு என்ற திருவாங்கூரின் பழய தலைநகர். அதுவே தொல்காப்பிய காலப் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறப்பகம் என்பதும் இங்கே நினைவிற் கொள்ளத்தக்கது.

மங்களாபுரம் போர்

“கொங்கலரும் நறும் பொழில்வாய்க் குயிலோடு மயில் அகவும் மங்களாபுரமெனும் மாநகருள் மாரதரை எறிந்தழித்து’

99

என்று கொஞ்சும் கவிமொழியில் மங்களாபுர வெற்றி குறிக்கப்படுகிறது. இங்கும் 'மாரதர்' என்ற சொல்லைத் தவிரப் போரில் எதிரி யார் என்பதை அறிய வேறு வழியில்லை. ஆனால், 'மாரதர்' என்பது புராண மரபு வழியாகப் பேரரசரைக் குறித்த தொடர் ஆகும். 'பெருந்தேர் வேந்தர்' என்பது அதன் பொருளாகும். இதுவும் ‘மதுர கருநாடகன்' என்ற இப்பாண்டியன் புகழ்ப் பெயருமே எதிரி கருநாடக நாட்டிலுள்ள ஒரு பேரரசன் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. கோச்சடையன் நாளில் இத்தகைய பேரரசு சாளுக்கியப் பேரரசு ஒன்றே.

பாண்டியப் பேரரசுக்கும் சாளுக்கியப் பேரரசுக்கும் இயல்