உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

169

பாக நேரடிப் போட்டி இந்நாளில் ஏற்படக் காரணம் கிடையாது. ஏனெனில், சாளுக்கியப் பேரரசின் எல்லையுடன் தொடர்புடைய பேரரசு பல்லவப் பேரரசேயாகும். முதலாம் மகேந்திரவர்மன் நாட்களில் சாளுக்கியப் பேரரசர் பல்லவப் பேரரசுக் கெதிராகப் பாண்டிய சேரசோழர் ஆதரவை பெரிதும் நாடினர் என்று காண்கிறோம். ஆனால், முதலாம் விக்கிரமாதித்தன் பல்லவப் பேரரசின் எல்லை கடக்கத் துணிந்ததாலேயே, சாளுக்கிய பாண்டியக் கைகலப்புக்கு இடம் ஏற்பட்டது. ஆனால், முதல் கைகலப்பே சாளுக்கியர் பேராற்றலுக்கு ஒரு அடியாகவும் அவர்கள் புகழுக்கு ஒரு கறையாகவும் அமைந்தது. அடுத்த சில தலைமுறைகளுக்குச் சாளுக்கிய பல்லவப்போட்டி, பகைமை தாண்டிச் சாளுக்கிய-பாண்டியப்போட்டியும் பகைமையும் ஏற்பட

து காரணமாயிற்று. ஆயினும் கீழ்கரையோரம் பல்லவப் பேரரசைக் கடக்காமல் இரு பேரரசுகளும் மோதிக்கொள்ள வழியில்லாதிருந்தது. உள்நாட்டுப் பகுதியிலோ கங்க அரசர் இருந்தனர். அவர்கள் தொடக்கத்தில் சாளுக்கியரை ஆதரித்துப் பல்லவரைத் தாக்கினர். பின் பல்லவர் நண்பராய் இருந்தனர். கோச்சடையன் காலத்துக்குப்பின்னரே அவர்கள் பாண்டியர் நண்பராய் பாண்டியர் வடபுல எதிர்ப்புக்கு உதவினர். இவற்றை மனதுட்கொண்டால் மங்களாபுரம் போரின் போக்கு விளக்கும்.

மங்களாபுரம் என்பது தென்கன்னட மாவட்டத்திலுள்ள

மங்களூரே என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இடைக்காலப் பாண்டியர் வரலாற்றில் இது அடிக்கடி இடம் பெறுகிறது. குடகு நாட்டு வரலாற்றிலும் பாண்டியர் சோழர் படையெடுப்புப் பற்றிய சின்னங்கள் பல உண்டு. குடகு நாட்டின் மிகப்பழமை வாய்ந்த வரலாறு இத்தமிழகத்தொடர்புகளுடனேயே தொடங்குகிறது என்னலாம். கீழ்க் கரையிலும் உள் நாட்டிலும் இல்லாத சாளுக்கிய பாண்டியத் தொடர்பு, மிகச்சிறு சிற்றரசுகளே மிகுதியாக இருந்த மேல்கரை வழியாக முதலில் பாய்ந்தது என்பதை மங்களாபுரம் போர் காட்டுகிறது.

மங்களாபுரம் அல்லது மங்களூரில் பாண்டியன் எதிரி ஒரு மராட்டிய அரசன் என்று பல ஆசிரியர்கள் குறித்துள்ளனர். ‘மாரதர் என்பதை அவர்கள் ‘மராடர்' என்று கொண்டிருக்கக் கூடும், ஆனால், அவர்கள் குறிப்பிடும் செய்தியே 'மாரதர்'