உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

|- -

அப்பாத்துரையம் - 16

சாளுக்கியரும் அவனுக்கு ஆதரவாகப் போர்க்களத்துக்கு வந்தனர்.

கி.பி.740 அல்லது 741-ல் வெண்பை என்னுமிடத்தில் நடந்த போரில் பாண்டியன் பராங்குசன் பெரு வெற்றி கண்டான் இப் போரில் பாண்டியர் படைத்தலைவன் காரி என்பவன்.பாண்டியர் புகழ் இப்போரினால் பெருவளம் உற்றது. பாண்டியப் பேரரசு இதன்பின் தென்னாட்டின் உச்ச உயர் பேரரசாக உயர்ந்தது. இதுவரை சாளுக்கியரிடம் உரிமையும் பல்லவனிடம் பாசமும் காட்டிவந்த கங்கர் இப்போது தெளிவாகப் பாண்டியர் மேலாட்சியையும் ஏற்று, அவர்கள் தேசத்தையும் இருகையேந்திப் பெற்றனர்.

சிரீபுருஷன் புதல்வி, கொங்கர் கோனான பாண் டி

ளவரசன் நெடுஞ்சடையனுக்கு மணமுடிக்கப்பெற்றாள். கொங்கர் செல்வனுடன் கங்கர் செல்வி கொண்ட இந்த இணைவு சாளுக்கியனுக்கும் பல்லவனுக்கும் பெரிய கண்ணுறுத்தலாக இருந்திருக்க வேண்டும்.

சாளுக்கியர் வீழ்ச்சி: இராஷ்ட்டிகூடர் எழுச்சி:

பாண்டிய - பல்லவ போட்டியின் உச்சநிலை கண்ட அதே தலைமுறையே சாளுக்கிய - பல்லவப் போட்டியின் உச்சநிலையும், பாண்டிய -சாளுக்கிய போட்டியின் உச்சநிலையும் கண்டது. தென்னாட்டின் இந்த முக்கோணப் பேட்டியால் மூன்று பேரரசு களுமே நாளடைவில் நலிவுற்றாலும், முதல் முதல் உரமற்று விழநேர்ந்தது சாளுக்கியப் பேரரசே. சாளுக்கியருக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த இராஷ்டிரகூட குடித்தலைவன் தந்திதுர்க் கனுக்குப் பல்லவன் இரண்டாம் நந்திவர்மன் உதவியாயிருந்தான். கி.பி.754-ல் தந்திதுர்க்கன் கடைசிச் சாளுக்கிய அரசனான கீர்த்திவர்மனை வென்றொழித்துத் தானே பேரரசனானான். அடுத்த ஓரிரு நூற்றாண்டுகள் சாளுக்கியப் பேரரசினிடமாக வடதிசையில் இராஷ்டிரக் கூடப் பேரரசு ஆற்றல் வாய்ந்ததாக வளர்ந்தது.

பல்லவன் உதவியைக்கூடப் பொருட்படுத்தாமல் இராஷ்டிரகூடத்தந்திதுர்க்கன் பல்லவப்பேரரசைப்படையெடுத்துக்