உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

179

காஞ்சியைச் சிலநாள் கீழடக்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்தத் தந்தி துர்க்கன் வயிரமேகன் என்ற சிறப்புப் பெயரால் குறிக்கப்பட்டான். திரு மங்கையாழ்வார் இதனைச் சுட்டியே,

"மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடிமாலை வயிரமேகன்

தன் வலி தன் புகழ்சூழ்ந்த கச்சி"

என்று பாடியுள்ளார். இராஷ்டிரகூடர் எழுத்து மூலங்களும் இதை வலியுறுத்துகின்றன. ஆனால், தந்திதுர்க்கன் காஞ்சியை நீண்ட நாள் கீழடக்கியிருக்கவில்லை. அவன் நோக்கமும் பல்லவப் பேரரசைக் கொள்வதன்று. வசப்படுத்துவதே என்று கருதலாம். ஏனெனில் அவன் தன் மகள் ரீவாவை நந்திவர்ம பல்லவனுக்கு மணஞ்செய்து தந்து, அவ்வுறவால் தன்னை வலுப்படுத்திக் கொண்டு சென்றான் என்று தோன்றுகிறது.

இராஷ்ரடிகூடர் - பல்லவரின் இந்த மண உறவு அவர்கள் நேசத்தைவிட அவர்கள் பகைமைக்குப் பின்னால் காரணமாய் அமைந்தது என்னலாம்.

பாண்டிய பல்லவப் போட்டி: பெண்ணாகடப் போர்

இரண்டாம் நந்திவர்ம பல்லவனும் பாண்டியன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மனும் ஒருங்கே ஆட்சி தொடங்கி நீண்ட காலம் ஆட்சி செய்தாலும், பாண்டியன் ஆட்சியே முதலில் முடிவடைந்தது. அதன்பின் பாண்டிய பல்லவப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய பாண்டியன் முன் ஆட்சியில் கொங்கர் கோமானாயிருந்த நெடுஞ்சடையன் பராந்தகனேயாவன் (765- 790) வேள்விக்குடிச் செப்பேட்டைத் தன் மூன்றாம் ஆட்சி யாண்டிலும் சீவரமங்கலம் செப்பேட்டை அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின்னும் வெளியிட்டுப் பாண்டியர் வரலாற்றுக்குப் பேருதவி புரிந்தவன் இவனே, சென்னைப் பொருட்காட்சி மனையிலும் இம்மன்னன் அளித்த மற்றொரு செப்பேடு உளது.