உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

||--

அப்பாத்துரையம் - 16

முந்திய பாண்டிய அரசன் காலத்தில் அமைச்சராயிருந்த மாறன்காரியே இவ்வரசன் காலத்திலும் தொடர்ந்து அரசியலைச் செவ்வனே நடத்தினான். ஆனைமலைக் கோயில் கட்டியவன் இவன் என்றே கருதப்படுகிறது. இவனன்றிக் காரி எயிணன், காந்தன், கணபதி என்ற சிறந்த படைத்தலைவர்களும் இவனுக்கு இருந்தனர். மாறன்காரி மாண்டபின், காரி எயினனே அவனுக்குப் பதிலாக அமைச்சனாய் இருந்தான். இப்பாண்டியனது உத்தர மந்திரியான மதுரகவியே பன்னிரண்டு ஆழ்வார்களு ள் ஒருவராகிய மதுரகவி என்று கருதுவர் சிலர். இப்பாண்டிய மன்னன் வைணவப் பற்றுள்ளவன் என்பதில் ஐயமில்லை.

இப்பாண்டியன் பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனைக் காவிரிக்குத் தென்கரையில் உள்ள பெண்ணாகடத்தில் முறி யடித்துப்பெரும் புகழ் அடைந்தான்.

“நாற்பெரும் படையும்

பாற்படப் பரப்பிக்

கருதாது வந்து எதிர்மலைந்த

காடவனைக் காடு அடையப்

பூவிரியின் புனற்கழனிக்

காவிரியின் தென்கரைமேல் தண்நாக மலர்ச்சோலைப்

பெண்ணாகடத்து அமர்வென்றும்”

என்று இப்போர் வேள்விக்குடிச் செப்பேட்டில் விரித்துரைக் கப்படுகிறது.

தகடூர் அதிகன் வீழ்ச்சி: ஆயிரவேலி அயிரூர், புகழியூர் அமர்க்களங்கள்

முந்திய பாண்டியன், பல்லவனுக்கு உதவியதற்காகத் தகடூர் அதிகனைப் போரில் தாக்கித் தண்டித்திருந்தான். ஆயினும் அதிகன் முற்றிலும் முறியடிக்கப் படவில்லையென்றோ, அல்லது தப்பிச்சென்று புதுவலிமை தேடினான் என்றோ தெரிகிறது. நெடுஞ்சடையன் ஆட்சியின்போது அவன் பல்லவன் இரண்டாம் நந்திவர்மன் உதவிமட்டுமன்றிக் கேரளன் உதவியும் பெற்றுப்