உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

185

ஏனெனில், இப்போர்கள் யாவும் சேரனை எதிர்த்த போர்களே, நெடுஞ்சடையன் நாட்களில் ஆய்வேளுக் குரியதாயிருந்து அவனால் கைக்கொள்ளப்பட்ட நாட்டிலே, அதே இடத்திலும் அருகிலும் இத்தனை போர்கள் நடைப் பெற்றிருக்க வழியில்லை. இக்கோட்பாட்டையே உறுதியாகக் கொண்டபின் பாண்டியர்க்கு கோவையின் முதற்போரே முதல் விழிஞப்போராகவும், நெடுஞ்சடையன் விழிஞப்போர் இரண்டாம் விழிஞப் போராகவும் கொள்ளத்தகும்.

வாதவூரடிகளாகிய மாணிக்கவாசகர் காலத்திற்கு முன் இருந்தவனும் அவரால் 'வரகுணனாம் தென்னவன்’, ‘வரகுணன் வெற்பில் வைத்தகயல்' எனப்பட்டவனும் ஆன வரகுணப் பாண்டியன் இவனே என்பர் சிலர். ஆனால், அப்பாண்டியனும் வாதவூரரும் சங்க இலக்கியம், மணிமேகலை காலத்தவர் என்ற ஆசிரியர் மறை மலையடிகளின் முடிவே இங்கும் முடிவாகக் கொள்ளத்தக்கது.

பட்டினத்தடிகளும்

நம்பியாண்டார் நம்பியும் டைக்கால முதல் வரகுணனுக்கு பிந்தியவரே யாதலாலும், இவ்விடைக்கால வரகுணனும் சிவநெறிப் பற்றுடையவனே யாதலாலும், அவர்கள் குறித்த வரகுணன் இவனே என்பது கூடாததல்ல. ஆயினும் கழற்சிங்கனைத் தம் காலத்தவனாகவும் நடுமாறனை அணிமைக் காலத்தவனாகவும் சுந்தரர் குறித்தது போன்ற தொனி அவர்கள் குறிப்பில் இல்லை. அத்துடன் சிவநெறிப் பற்றுப் பாண்டியர் பெரும்பாலாருக்கும் பொதுவேயாகும். ஆகவே மொத்தத்தில் வாதவூரர் குறித்த வரகுணனையே பின்னோரும் அவர் வழிநின்று குறித்தவர் ஆகலாம்.

இடைக்காலத்துக்குரிய இம்முதல் வரகுண பாண்டியன் போரும் வரலாறும் நமக்குத் திறம்படத் தெரிய வழியில்லை யாயினும், அவன் காலத்தில் பாண்டியப் பேரரசு உச்ச நிலையி லிருந்ததென்று நாம் உறுதியாகக் கூறமுடியும். அவன் ஆட்சி சோழ நாடுமுழுதும் பரவியிருந்ததென்றும், பல்லவப் பேரரசினிடமிருந்து சோழ நாடு முழுவதும் அவன் காலத்திலோ, அதற்குச் சற்றுமுன்னோ கைக்கொள்ளப்பட்டு விட்டதென்றும் அவன் கல்வெட்டுக்களின் பரப்பே காட்டுகின்றன.