உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

அப்பாத்துரையம் - 16

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர், இராதா

புரம், அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் அவன் அரும்பெருங் கோயிற் பணிகள் ஆற்றினான்.

இராஷ்டிரகூட - பல்லவர் போட்டி: விளந்தைப்போர் கி.பி.

788

இரண்டாம் நந்திவர்மன் பல்லவனுக்குப் பின் வந்த தந்திவர் மன் (775-826) இராஷ்டிரகூட மரபுடன் உறவுடையவன். ஆனால், இது அவனுக்கும் அவன் பேரரசுக்கும் தொல்லையாகவே முடிந்தது. துருவன் மூன்றாம் கோவிந்தன் என்ற இரண்டு இராஷ்டிரகூடப் பேரரசர் ஆட்சித் தொடக்கத்தில் தன் உறவினரான போட்டி அரசுரிமையாளரை ஆதரித்து அவன் இராஷ்டிரகூட அரசியலில் தலையிட்டுப் பல போர்களில் மாட்டிக் கொண்டான். இதனால் பல்லவப் பேரரசு ஓரளவு தளர்வுற்றதென்னலாம். ஆனால், கி.பி. 788-ல் விளந்தைணனுக் கெதிராகப் பல்லவன் தந்திவர்மன் பெரு வெற்றி பெற்றான். இப்போரில் பாணர்குடி மன்னன் பல்லவன் பக்கமாக இருந்தான்.

குருக்கோட்டுப் போர்க்களம் (கி.பி. 826 -836)

தந்திவர்ம பல்லவனுக்குப் பின் தெள்ளாறெறிந்த நந்திவர் மன் என்று குறிக்கப்படும் மூன்றாம் நந்திவர்மன் (826 -850) அரியணை ஏறினான்.சுந்தரமூர்த்தி நாயனாராலும் சேக்கிழாரா லும் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவனாகக் குறிக்கப் பட்ட கழற்சிங்கன் அல்லது கழல்நந்தி இவனே கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார்

என்று

திருத்தொண்டத்தொகையில்,

கடல்சூழ்ந்த உலகெல்லாம்

காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

என்ற அடிகளில் இவனைத் தம் காலத்தவராக, 'காக்கின்ற' என்ற நிகழ்காலம் மூலம் குறித்துள்ளார். இம்மன்னன் மீது பெயர் அறிவிக்கப்படாத அவன் காலத் தமிழ்க் கவிஞர் ஒருவர் 'நந்திக்