உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

187

கலம்பகம்' என்ற அழகிய காவியம் புனைந்தியற்றியுள்ளார். தவிர சங்க காலத்தில் ஒரு பாரதம் பாடிய பெருந்தேவனார் இருந்தது போல, இவன் காலத்திலும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலப்பதிகாரத்தைப் போன்ற நடையில் ஒரு பாரதம் பாடிய பெருந்தேவனார் இருந்தார். வெண்பாவால் இயன்ற இந்தப் பாரதத்திலும் ஒரு சில பாக்களே நமக்கு வந்தெட்டி யுள்ளன.

குருக்கோடு என்பது துங்கபத்திரை ஆற்றங்கரையிலுள்ள அரண் அமைந்த நகர் என்று அறிகிறோம். பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரால் தன் முன்னோர் அடைந்த தோல்விகளின் கறை நீக்க எண்ணி இராஷ்டிரகூட பேரரசின் மீது படையெடுத்துச் சென்றான். குருக்கோட்டில் எதிரிகளுடன் கை கலப்பு ஏற்பட்டு, ஒரு உக்கிரமான போர் நடைபெற்றது.

66

கூடலர் முனைகள்சாய

வடபுலம் கவர்ந்துகொண்டு”

என்று சேக்கிழார் பெரிய புராணமும்,

குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும் அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள்

என்று நந்திக்கலம்பகமும் இவ்வெற்றியைப் பாடியுள்ளன. யானைகள் வாளால் துணிக்கப்பட்டன. அவை அணிந்திருந்த முத்துமாலைகள் போர்க்களத்தில் சிதறிக்கிடந்தன. அக்காட்சி போர்க்களமங்கை தன் பற்களைக் காட்டிச் சிரிப்பது போன்றிருந் தது' என்று வேலூர்ப்பாளையப் பட்டயம் போர்பற்றி அணியழகு படக் கவிதை புனைந்துள்ளது.

இப்போரின் பின் பல்லவப் பேரரசின் மதிப்பு உயர்ந்த தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் இராஷ்டிரகூடப் பேரரசர் களிலே பெரும் புகழ் வாய்ந்த பேரரசனான அமோகவர்ஷன் தன் புதல்வி சங்காவை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். அந்நாளைய பெண்பாலாரில் அழகாலும் குணத்தாலும் கல்வி