உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

அப்பாத்துரையம் - 16

யாலும் சிறந்து 'நாமகளும் பூமகளும் ஒருங்கு பிறந்தா' ளென்னும்

இவ்வரசி

சிறப்புடையவளாக, அமோகவர்ஷனைப்போலவே

வருணிக்கப்படுகிறாள். அவளும் சமணநெறி சார்ந்தவளாகவே இருந்திருத்தல் கூடும். சிவன் கோயிலில் பூவை முகர்ந்ததற்காக மூக்கை ஒரு நாயனாரும், அதன்பின் கையை மற்றொரு நாயனாரான அவள் கணவனும் வெட்டினார்கள் என்று பெரிய புராணங் கூறுவது இப்பெண்ணாரணங்கைப் பற்றிய செய்தியே என்று ஆராய்ச்சியாளர் பலர் கருதுகின்றனர்.

பாண்டிய பல்லவப் போட்டி: தெள்ளாற்றுப் போர் I கி.பி.834

ஒரு

தெள்ளாறு வடஆர்க்காட்டு மாவட்டத்தில் வந்தவாசிக் கருகிலுள்ளது. இதே இடத்தில் சோழப் பேரரசர் காலத்திலும் போர் நடந்ததாதலால், இதனை நாம் முதல் தள்ளாற்றுப்போர் என்று கூறலாம். மூன்றாம் நந்திவர்ம பல்லவனுக்குத் 'தெள்ளாறெறிந்த நந்திவர்மன்' என்ற சிறப்புப் பெயரையும் பெரும் புகழையும் அளித்த போர் இதுவேயாகும்.

முதலாம் வரகுணவர்மனுக்குப் பின் பாண்டிய அரியணை ஏறியவன் சீர்மாறன் சீரீவல்லபன் பரசக்கர கோலாகலன் என்பவன் (830 - 862). பல்லவரிடமிருந்து முந்திய பாண்டியன் சோணாட்டைக் கைப்பற்றிய பின் பாண்டியன் அத்துடன் அமையாமல் பல்லவ நாட்டின்மீதே படையெடுக்க எண்ணினான். பல்லவன் வடதிசைப் படையெழுச்சியைப் பயன்படுத்தி அவன் சேர சோழப் படைகளையும் உடன் கொண்டு தெள்ளாறு வரை முன்னேறினான். அவ்விடத்தில் தென் தமிழ்ப் படைகள் படுதோல்வியடைந்தன. இராஷ்டிரகூட வெற்றியால் உயர்ந்த பல்லவன் மதிப்பு தெள்ளாற்று வெற்றியால் முன்னிலும் பன்மடங்காக வளர்ந்தது.

இப்போரால் சோழநாடு பழையபடி பல்லவப் பேரரசுக்கு உட்பட்டதாயிற்று.

பெருந்தேவனார் பாரத வெண்பா இத்தெள்ளாற்றுப் போரைக் குறிப்பிட்டு நந்திவர்மனைப் புகழ்ந்துள்ளது.