உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

வண்மையால், கல்வியால், மாபலத்தால், ஆள்வினையால் உண்மையால், பாராள் உரிமையால், -திண்மையால், தேர்வேந்தர் வான்ஏறத் தெள்ளாற்றில் வென்றானோடு யார்வேந்தர் ஏற்பார் எதிர்?

வெள்ளாறு, பழயாறு, நள்ளாறு, கடம்பூர்ப் போர்க்களங்கள்

189

தெள்ளாறெறிந்த பின்னும், பல்லவன் மூன்றாம் நந்தி வர்மன் பகைவர்களைத் துரத்திச் சென்று, சோணாட்டில் உள்ள வெள்ளாறு, பழயாறு, நள்ளாறு, கடம்பூர் முதலிய போர்க் களங்களில் அவர்களை முறியடித்துத் துரத்தினான். இப் போர்கள் 834-க்கும் 836-க்கும் இடையே நடைபெற்றிருக்கக் கூடும்.

தமிழ் வளர்த்த நந்தி

தெள்ளாறெறிந்த நந்திவர்வன் தமிழ்ப் புலமையையும் தமிழ்ப் பற்றும் உடையவன், 'தமிழ் நந்தி’ ‘பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி' 'நூற்கடல் புலவன்' 'நூல் வரம்பு முழுதும் கண்டான்' என நந்திக் கலம்பக ஆசிரியர் அவனைப் புகழ்கின்றார். அவன் மறைவு பற்றிய அவர் பாடலுடன் சோகரசத்துக்கும் அணியழகுக்கும் ஈடாகக் கூறத்தக்க பாடல்கள் மிகச் சிலவே. வானுறுமதியை அடைந்தது உன்வதனம்! வையகம் அடைந்தது உன் கீர்த்தி! கானுறு புலியை அடைந்தது உன் வீரம்! கற்பகம் அடைந்தது உன் கரங்கள்! தேன்உறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்!

செந்தழல் புகுந்தது உன்மேனி!-

யானும் என் கவியும் எவ்விடம் புகுவேம், எந்தையோ! நந்தி நாயகனே!

பாண்டியர் இலங்கைப் படையெடுப்பு : சிங்களப்போர்: குன்னூர்ப் போர் 840

சீர்மாறன் சிரீவல்லபன் வெற்றிகளாகச் சிங்களம், குன்னூர், விழிஞம் என்று மூன்று பெயர்களை மட்டுமே சின்னமனூர்ச்