உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 16

190 || செப்பேடுகள் குறிக்கின்றன. சிங்களம் என்ற சொல் இலங்கை யைக் குறித்ததென்பதில் ஐயமில்லை. ஆனால், அது இங்கே ஒரு போர்க்களப் பெயராகக் கூறப்பட்டதா, முழு இலங்கைப் போரையும் மொத்தமாகக் காட்டிற்றா என்பது தெரியவில்லை. அதுபோலவே சிங்களம், விழிஞம் ஆகிய இரண்டு வெற்றிகளின் இடையே கூறப்படுகிற குன்னூர் முந்தியதைச் சேர்ந்ததா, பிந்தியதைச் சார்ந்ததா என்பதும் விளங்கவில்லை. கேரளப் பகுதியிலும் நீலகிரிப் பகுதியிலும் குன்னூர் என்ற இடப்பெயர்கள் உள்ளன. ஆனால், சிங்களப் போர் என்ற பொது நிகழ்ச்சியின் முக்கிய உறுப்பாகவே குன்னூர் குறிக்கப்பட்டிருக்கிறது என்று கருத இடமுண்டு.

கடலுக்கப்பாற்பட்ட தலைத்தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும் இடையே சங்ககாலஉறவு, பெரும்பாலும் சோழர் படையெடுப்பாகவும் சேரநாட்டவர் குடியேற்றமாகவுமே இருந்தது. பாண்டிய நாட்டுத் தொடர்பு மன்னர் நேசத் தொடர்பாகவும் அத்துடன் மன்னர், மக்கள் மண உறவுத் தொடர்பாகவும் மட்டுமே இருந்தது. நெடியோன் காலத்துக்கு ப்பால், இலங்கைத் தமிழகமும் தலைத் தமிழகமும் கடலால் பிரிவுற்று வேறு வேறு நிலப்பிரிவுகளானபின், சீர்மாறன் ஆட்சியிலேயே நாம் முதல் தடவையாகப் பாண்டிய இலங்கை சரிசமப் போட்டிப் பூசல்பற்றிக் கேள்விப்படுகிறோம். இது உண்மையில் பாண்டியர் பேரரசு விரிவின் ஒரு படியே என்பதில் ஐயமில்லை. ஏனெனில் கரிகாலனுக்குப்பின் அச்சங்ககாலச் சோழனையும் ம் அவன் மரபினரையும் இடைக்காலப் பாண்டியரையும் பின்பற்றிச் சோழப் பேரரசரும் இலங்கையைத் தம் பேரரசு வளர்ச்சியில் கடல்கடந்த பேரரசின் முதற் படியாகக் கொண்டது காண்கிறோம். ஆயினும் இடைக்காலப் பாண்டியர் ஊழியில் மட்டுமே பாண்டியரும் இலங்கையரசரும் சரிசமப் பேரரசுப் போட்டியில் முனைவது காண்கிறோம். பாண்டி நாட்டுத் தமிழக மறுமலர்ச்சி இலங்கையிலும் இந்நாளில் பூப்பெய்தியது என்று தோற்றுகிறது.

போருக்குக் காரணமாக இரு திசையிலும் பேரரசுக்குரிய சாக்குப் போக்குகளும் வாய்ப்புகளும் இயல்பாகக் கிடைத்தன.