உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

191

நெடுஞ்சடையன் மழவர்கோன் பாவையன்றி வேறு ஓர் அயல் புலப் பாவையையும் மணந்திருந்தான். அவ்வழியில் பிறந்த ஓர் இளவரசன் சீர் மாறனுக்கெதிராகப் பாண்டிய அரசுரிமை கோரினான். பாண்டியப் பேரரசின்மீது ஆதிக்கம் செலுத்தும் விழிப்புடன் இலங்கை அரசன் தர்மபாலன் அவனுக்கு ஆதரவளித்தான். அதேசமயம் இலங்கை மரபுப்படி தனக்கு அமைச்சர் பதவி அளிக்கவில்லை என்று குறைப்பட்ட தர்மபாலனின் இளவல் மகந்ேதிரன் சீர்மாறனிடம் தஞ்ச மடைந்தான். போர்த் தினவுகொண்ட இருபெருவேந்தர்களும் வ்வாறு கடல் கடந்து தம் அரசியல் கரங்களை நீட்ட முனைந்தனர்.

பாண்டியன் ஒரு படையுடன் மகேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான்.பாண்டியர் படை இலங்கையில் ‘மகதசித' என்ற கோட்டையை முற்றுகையிட்டது. இவ்வமயம் தர்மபாலன் இறக்கவே, அவன் மகன் அகபோதி அரசனானான். அரசன் தன் உடன் பிறந்தவனான சிலாமேகசேனனுடன் அவர்களை எதிர்த்துப் போரிட்டான். இந்தப் போரே ஒருவேளைக்குன்னூர்ப் போராக இருந்திருக்கக்கூடும். இப்போரில் பாண்டியன் முழுநிறை வெற்றி பெற்றான். ஆனால், இப்போரில் பாண்டியன் பேரழிவு ஏற்பட்டது.பாண்டியர் தளபதியும் மகேந்தினும் படைவீரர்களில் பெரும்பகுதியினரும் மாண்டனர், அதே சமயம் பாண்டியரிடம் பட்ட அவமதிப்புத் தாங்காமல் இளவரசன் சேனன் தற்கொலை செய்துகொண்டான். இந்நிலையில் இலங்கை மன்னன் தன் அரியணையையும் அணிமணி நிதிகளையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள எண்ணி அவற்றுடன் மலாய் நாட்டுக்கு ஓடினான்.

இப்போரில் பாண்டியர் ஈழ நாட்டில் பல நகரங்களைக் கொள்ளையிட்டனர் என்றும், புத்தப்பள்ளிகளிலுள்ள பொற் படிவங்களையும் விலையுயர்ந்த பல பொருள்களையும் கவர்ந்து சென்றனர் என்றும், சிங்கள மாநிலம் தன் செல்வமெல்லாம் இழந்தது சிறுமையுற்றதென்றும் மகாவம்சோ கூறுகிறது.

இலங்கையும் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்டது.

கடலாட்சித் துறையிலும் சங்ககாலப் பண்பின் மறுமலர்ச்சி பாண்டியர் ஆட்சியில் ஏற்பட்டது என்பதை இப்போர் காட்டுகிறது. சேர சோழ பல்லவரும் கடற்படை