உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

193

தமிழகம் இப்பாண்டிய வெற்றி மூலம் தன்னைத்தான் உணரத் தொடங்கிவிட்டது. ஆனால், தமிழகம் என்றும் எந்தத் தனி ஒரு தமிழனோ அல்லது தனியொரு தமிழரசனோ உச்ச உயர்நிலை அடைவதைப் பொறுப்பதில்லை இதனால் மற்ற தமிழரசுகள் பேரரசுகளும், அரசுகளும், சிற்றரசுகளும் யாவும் கலங்கின; எதிர்ப்பில் ஒன்றுபட முனைந்தன. அது மட்டுமன்று. தென்னாட்டின் வடதிசைப் பேரரசுகளும். சிந்து கங்கை வெளியில் வலிமை கெடாதிருக்க ஒரு சில அரசுகளும்கூட நடுங்கின. அவையும் எதிர்ப்புக்கு வலுவூட்டின. பாண்டியப் பேரரசால் மாநிலத்துக்குவர இருந்த ஆபத்து பண்டை நெடியோன் புகழின் நிழலாக, சங்ககாலச் செங்குட்டுவன், கரிகாலன் புகழின் மறுபதிப்பாக அவர்கள் உள்ளத்தில் வீசியிருத்தல் கூடும். அவர்கள் அனைவரும் விரைவில் ஆபத்துக் காலத் தோழர்களாக ஒன்று கூடிப் பாண்டியரை எதிர்க்க முனைந்தனர். குடமூக்குப் போரே அதன் விளைவு.

குடமூக்கு என்பது கும்பகோணத்துக்குரிய தமிழ்ப் பெயர். அப்பேராலேயே அது தமிழலக்கியத்திலும் வரலாற்றி லும் குறிக்கப்படுகிறது. அது கி.பி. 854-ல் நடை பெற்றிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் கருதுகிறார்.

"கொங்கலரும் பொழில் குடமூக்கில் போர்குறித்து வந்தெதிர்த்த கங்க, பல்லவ சோழ, காளிங்க, மாகதாதிகள் குருதிப்பெரும்புனல் குளிப்பக்

கூர்வெங்கணைத் தொடைநெகிழ்த்து”

என்று சின்னமனூர்ச் செப்பேடு இவ்வெற்றி பற்றி முழக்க மிடுகின்றது. இதில் பாண்டியர் முக்கிய எதிரிகளும் எதிரிகளுக்குத் தலைமை வகித்தவர்களும் பல்லவர்களே என்பதில் ஐயமில்லை. இச்சமயம் பல்லவப் பேரரசை ஆண்டவன் நிருபதுங்கவர்மன். அவனது வாகூர் செப்பேடுகளும் இதைக் குறிப்பிடுகின்றன.

பல்லவனுடன் கங்கர், சோழர், கலிங்கர், மகதர் ஆகியவர் படைகளும் பாண்டியனை எதிர்த்தன என்று சின்னமனூர்ச்