உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(194) || -

அப்பாத்துரையம் - 16

செப்பேடு கூறுகிறது. தெள்ளாற்றுக்குப் பின் சோழர் பல்லவர் சிற்றரசர்களே. கங்கரும் இச்சமயம் பல்லவருடன் சேர்ந்ததில் வியப்பில்லை. அவர்கள் என்றும் பேரரசராகாவிட்டாலும் அவ்வெண்ணத்துடன் எப்போதும் பக்கமாறி வந்தவர்களே. ஆனால், கலிங்கரும் மகதரும் இதில் இடம் பெற்றிருப்பதை வரலாற்றாசிரியர் மிகையுரை என்று கருதுகின்றனர். மிகையுரை எப்போதும் கவிதையில் இடம் பெறுபவை. ஓர் அரசனுக்கும், ஒரு போருக்கும் மட்டும் அவை உரியவையல்ல, எனவே அது மிகையுரையன்று, கால நிலையைக் கண்ணாடி போலக் காட்டும் மெய்யுரையே.

தமிழகத்திலேயே தென்னார்க்காட்டு மாவட்டத்தின் ஒரு பகுதியும் மைசூரை அடுத்த பகுதியும் மகதநாடு என்று குறிக்கப் படுவதுண்டு. தென்னார்க்காட்டு மாவட்டத்தில் பாடலிபுரம் என்ற வடமகதத் தலைநகரப் பெயருடைய பண்டைநகரமும் உண்டு. குடமூக்குப் பேரிலீடுபட்ட மகதர் இப்பகுதிச் சிற்றரசராக இருத்தலும் கூடும். ஆனால், கலிங்கருடன் அவர்கள் இணைத்துக் கூறப்படுகின்றனர். இத்தொடர்புகள் இன்னும் ஆராயத்தக்கன.

ஏழாம் நூற்றாண்டின் பின் பன்னிரெண்டாம் நூற்றாண் டில் இஸ்லாமிய அரசு பேரரசுகள் வரும்வரை வடதிசையில் பேரரசுகளே கிடையாது என்பதையும், அச்சமயந்தான் தென்னாட்டில் மாநிலத் தேசியம் தென்னாட்டுப் பேரரசு அவா உருவில் கரு முளைத்து, தென்னாட்டுப் பேரரசுப் போட்டியில் கருமுதிர்வுற்று, சோழப் பெரும் பேரரசின் உருவில் பிறக்க இருந்ததென்பதையும் தேசியக் கண்ணோட்டமற்ற அயல்புல, அயல் நோக்குடைய வரலாற்றாசிரியர் காணத் தவறியுள்ளனர்.

அரசிலாற்றுப் போர் கி.பி.862

சீர்மாற சிரீவல்லப் பாண்டியனது கடைசிப் போர்க்களம் அரசிலாற்றுப் போர்க்களமே. அது அரிசிலாற்றங் கரையில் நடைபெற்றதனால் அரசிலாற்றுப் போர் என்றே அழைக்கப் படுகிறது.பாண்டியர் பெருந்தோல்வியாதலால் அது பாண்டியர் செப்பேடுகள் எதிலும் குறிக்கப் பெறவில்லை ஆனால், வெற்றி பெற்ற பல்லவன் நிருபதுங்கனது வாகூர்ச் செப்பேடுகள் அதை விதந்துரைக்கின்றன.