உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(230 ||--

அப்பாத்துரையம் - 16

சுந்தரசோழன் இறந்தபோது அவன் மனைவியருள் வானவன் மாதேவி என்பவள் பால்குடி குழந்தை ஒன்றை விட்டுவிட்டுக் கணவனுடன் எரிமூழ்கினார்.

“முலைமகப்பிரிந்து முழங்கு எரிநடுவணும் தலைமகற் பிரியாத் தையல்"

என்று அந்நாளைய கல்வெட்டுக்கள் அவர் உயிர் மறுப்பைப் புகழ்கின்றன.

இவ்வீர அரச நங்கையே சோழப் பேரரசனான இராசராசனை ஈன்ற மாதேவியாவாள்.

வீரசோழிய உரைமேற்கோள் செய்யுளான கலிப்பா ஒன்று சுந்தர சோழனின் வண்மையைப் புகழ்ந்துள்ளது. அது புத்த சமயஞ்சார்ந்த ஏடு என்பதையும் கீழே தரப்படும் பாடலின் முதலடி காட்டுகிறது.

"போதியந் திருநிழல் புனித! நிற்பரவுதும்,

மேதகுநந்திபுரி மன்னர் சுந்தரச்

சோழர் வண்மையும் வனப்பும்

திண்மையும் உலகில் சிறந்து வாழ்க எனவே!"

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் முதலாம் இராசராச சோழனால் அவன் தாய் தந்தையரான சுந்தர சோழன், அரசி வானவன் மாதேவி ஆகியோரின் படிவங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழகத்தின் ஒப்புயர்வற்ற இருபெரும் பேரரசர்கள்

சுந்தரசோழன் காலமானவுடனே அவன் மகன் முறைப்படி அரசனாகவில்லை. பொதுமக்கள் அவனே அரசனாக வேண்டு மென்று விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால், அரிஞ்சயனுக்கு முன்பே இளமை ளமை காரணமாக அரசுரிமை பெறாதிருந்த கண்டராதித்தன் மகன் மதுராந்தக உத்தம சோழனுக்கு (970-985) அவன் அரசுரிமையை விட்டுக் கொடுத்திருந்தான். அதற்குப் பதிலாக, உத்தம சோழனுக்குப் பின் இராசராசனே அரசுரிமை பெறுவது என்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.