உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

231

சோழப் பேரரசை ஒரே ஆட்சியில் பெரும் பேரரசாக்கியவன் முதலாம் இராசராசனே (985 - 1014). அவன் பேரரசு விரிவினால் மட்டும் பெரியவனல்லன். பேரரசு வென்றாண்டவீரத்தால் மட்டும் பெரியவனல்லன். அரசனுக்கும் பேரரசனுக்கும் உரிய எல்லாப் பண்புகளும் நிறைந்த தமிழகப் பேரரசன் மட்டுமல்ல, உலகப் பேரரசன் என்றே அவனைக் கூறலாம். ஏனெனில் உலக வரலாற்றிலேயே இத்தகைய பண்பு நிறைவைக் காண்டல் அரிது. அலக்ஸாண்டர், ஸீசர், நெப்போலியன் ஆகியவர்களுடன் மட்டுமே அவனை ஒப்பிட முடியும். அவன் தொலைநோக்கு அவர்களிடையே அலெக்ஸாண்டர் ஒருவருக்கே இருந்ததெனலாம். ஆனால், ஆட்சித் திறமையிலும் தேய ஆட்சித் திறமையிலும் எந்த அரசர் பேரரசரையும் அவனுக்கு இணையாகக் கூற முடியாது.

மன்னர் வெற்றிகளையும் செயல்களையும் கல்வெட்டுக் களின் முகப்பில் மெய்க்கீர்த்திகளாக வகுத்துரைக்கும் வழக்கத்தைப் புதுவது புனைந்து தமிழக வரலாற்றுக்குப் பேருதவி புரிந்ததற்காக அவனைப் புகழாத வரலாற்றாசிரியர் இல்லை. ஆனால், நாட்டு வரலாற்று வகையில் அவன் காட்டிய அதே நுண்மாண் நுழைபுலத்தை அவன் தன் பேரரசின் வீர வெற்றிகளிலும் ஆட்சித் திட்டங்களிலும் காட்டினான். அவன் வெற்றிகள் முன்னைய தமிழரசர்,பேரரசர் எவர் வெற்றிகளையும் விட -சங்ககால, பிற்கால அரசர் ஆகிய எவர் வெற்றிகளையும் தாண்டி- நிலையான நீடித்த பயன் தந்தன. அவன் திறமையால் ஒரு நூற்றாண்டுக்கும், அவன் ஒப்பற்ற பின்தோன்றலான முதலாம் குலோத்துங்கன் திறமையால் மற்றொரு நூற்றாண்டுக்கும் சோழப் பேரரசு நிலைத்திருந்தது.

தமிழகப் பேரரசுகள் எதுவும் இப்படி நூற்றாண்டுக் கணக்காக உச்ச நிலையிலில்லை. அதுமட்டுமன்று. தந்தை ஆட்சித் தொடக்கத்தை அடுத்துப் பிள்ளையாட்சி தொடங்கவைத்து, தந்தை காலத்திலேயே பிள்ளையும் சரி மதிப்புடன் ஆட்சிப் பயிற்சி பெற்று ஆளச்செய்ததனால் உலகில் எந்தப் பேரரசுமரபும் காணாத அதிசயத்தை, திறமையில் ஒருவருக்கொருவர் குறையாத பல தலைமுறைப் பேரரசர் மரபை அவன் உண்டுபண்ணினான். அவன் ஊக்கியப் போர் ஆர்வம்,