உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

(255

சோழ சாளுக்கியப் போராட்டம் II; பளகாம்வேப் போர் 1019: முசங்கிப்போர் 1020

மேலைச்சாளுக்கிய அரசனான ஐந்தாம் விக்கிரமாதித் தனுக்குப் பின் அவன் இளவல் சயசிம்மன் பட்டத்துக்கு வந்தான். தந்தையும் தமயனும் இழந்த நாடுகளை அவன் சோழருடன் போர் செய்து திரும்பவும் பெற்றான் என்று பளகாம்வேயிலுள்ள 1019- ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அப்பகுதியில் அவன் சோழர் எல்லைப்படைகளை வென்று இரட்டைபாடி ஏழரை இலக்கம் சார்ந்த வடமேற்கு மைசூர், பெல்லாரிப் பகுதிகளைக் கைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

டில்

அடுத்த ஆண்டி ல் முயங்கி அல்லது முசங்கியில் நடைபெற்ற போரில் இராசேந்திரன் இரட்டைபாடி ஏழரை இலக்கத்தை மீட்டுப் பெற்றான். சயசிம்மன் ஓடி ஒளிந்து கொண்டான். அவன் நிதிக்குவைகளை வாரிக் கொண்டு இராசேந்திரன் மீண்டான்.

பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு ஒளித்தசய சிங்கன் அளப்பரும் புகழொடு

பீடியல் இரட்டபாடி ஏழரை

இலக்கமும், நவநிதிக் குலப்பெரு மலைகளும் பெற்றனன் என்று மெய்க்கீர்த்தி புகல்கின்றது.

இப்போர்கள் துங்கப்பத்திரை எல்லையை நிலையாக்கும் போர்களாக மட்டுமே இருந்தன. மேலைச்சாளுக்கியர் அது கடந்து தெற்கிலும், சோழர் அது கடந்து வடக்கிலும் வென்றனராயினும், இரண்டும் நீடிக்கவில்லை.

சோழர் வடதிசைப் படையெழுச்சி: 1022 -1023

இராசராசன் வெற்றிகளாலும் பத்தாம் ஆட்சி ஆண்டு காலத்துப் இராசேந்திரன் ஆற்றிய போர்களாலும் இராசராசன் காலத்துப் பேரரசின் எல்லை முழுதும் நிலையான எல்லையாயிற்று. பேரரசு வெளிநாட்டுப் போர்களுக்கு மூலதனமாகுமளவு நிலையான வலுப்பெற்றது. இதன் பின்னரே இராசேந்திரனுக்கேயுரிய தனி வெற்றிகள் தொடங்குகின்றன, பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர