உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

275

கலியாணபுரத்திலேயே வெற்றிக்கறிகுறியாக இராசாதி ராசன் வீராபிடேகம் செய்து கொண்டானென்றும், அச்சமயம் விசயராசேந்திரன் என்ற வீரப்பட்டம் மேற் கொண்டான் என்றும் அறிகிறோம்.

கம்பிலித் தம்பம் நட்டது, கலியாணபுர அழிவு, வராக மலைப் புலிப்பொறிப்பு ஆகிய செய்திகள் தமிழ் இலக்கியத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

“கம்பிலிச் சயத்தம்ப நட்டதும்

கடி அரண்கொள் கலியாணர்கட்டு அறக்

கிம்புரிப் பணைக் கிரி உகைத்தவன்

கிரிகள் எட்டிலும் புலிபொறித்ததும்

மும்மடிபோய்க் கலியாணி

செற்ற தனியாண்மைச் சேவகனும்

(கலிங்கத்துப் பரணி 8-26)

(விக்கிரம சோழனுலா 37 - 8)

என இவற்றைச் சயங்கொண்டாரும் ஒட்டக் கூத்தரும் குறித்துள்ளனர்.

சோழ - சாளுக்கியப் போட்டி: கொப்பத்துப் பெரும்போர் 1054

கொப்பம் என்பது மேற்கு மைசூர்ப் பகுதியில் மேல் மலைத் தொடருக் கருகிலுள்ளதென்று சிலரும், இன்றைய பம்பாய் மாகாணத்தில் பெல்காம் மாவட்டத்தருகில் கிருஷ்ணையாற்றி லுள்ள ஒரு குடுவை வளைவின் அருகேயுள்ளதென்று வேறு சிலரும் கருதுகின்றனர். இதில் பிந்திய இடமே பொருத்தமானது என்று தோன்றுகிறது ஏனெனில் இவ்விடம் ஒரு தீர்த்தம் என்று கூறப் பட்டுள்ளது. இவ்வளைவினருகே ஒரு தீர்த்தத் தலமும் அதனை அடுத்து ஒரு கோயிலும் இன்னும் ன்னும் உள்ளன. அக்கோயிலும் கொப்பேசுரர் கோயில் என்றே வழங்குகிறது.தவிர, வெற்றியின் பின் சோழர் கோலாப்பூரில் வெற்றித் தூண் நாட்டியதாகக் கூறியுள்ளனர். அவ்வெற்றித் தூண் இன்று காணப்படாவிட்டாலும், கோலாப்பூர் இவ்வளைவிலிருந்து சிறிது தொலைவிலேயே யுள்ளது.