276
|– –
அப்பாத்துரையம் - 16
முதலாம் இராசாதிராசன் தன் தம்பி இரண்டாம் இரா சேந்திரனுடன் மேலைச் சாளுக்கியர்மேல் படையெடுத்துச் சென்றான். கொப்பத்தில் சோழப் படைகளும் மேலைச் சாளுக் கியப் படைகளும் சந்தித்தன. இருதரப்பினரும் போருக்கு ஆயத்த மாகத் தம் படைகளை அணிவகுத்து நிறுத்தினர். மேலைச் சாளுக் கியர் பக்கம் மன்னன் சோமேஸ்வர ஆகவமல்லன் போர்க்களம் வரவில்லை.ஆனால், அவன் மைந்தர்கள் படைகளைத் தலைமை வகித்து நடத்தினர். சோழர் பக்கத்திலோ மன்னன் இராசாதி ராசனும் இளவரசன் இராசேந்திரனும் படைத்தலைவரா யிருந்தனர்.
சோழப் படையின் முன்னணியில் இராசேந்திரனே தலைமை வகித்து ஒரு யானைமேல் இவர்ந்திருந்தான். பின்னணியில் அதுபோல யானையின்மேல் மன்னன் இராசாதிராசன் தலைமை தாங்கி இருந்தான். எதிரிகளின் முதல் யானைப் படைத் தாக்குதலிலேயே இராசேந்திரன் முன்னணி சீர்குலைந்தது. ஆனால், இராசாதிராசன் பின்னணி முன் வந்து நின்று எதிரியின் தாக்குதலைச் சமாளித்தது. எளிதாகத் தோற்றிய சாளுக்கியர் வெற்றி தடைப்பட்டு மீட்டும் மும்முரமான தாக்குதல் எதிர்த்தாக்குதல் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சாளுக்கியர் தம் வில்லாளரை இராசாதிராசன் யானையையே ஒரு மிக்கக் குறிவைத்து அம்புமாரி பொழியும்படி ஏவினர். யானை சல்லடையாய்த் துளைக்கப்பட்டது. யானை மீதிருந்த ஆட்களும் ஒவ்வொருவராகக் கொல்லப் பட்டனர். இறுதியில் மன்னனும் யானை மீதிருந்தே சாய்ந்தான்.
மீகாமனில்லா மரக்கலம் போல் சோழர் படை இப்போது தள்ளாடிற்று. இத் தறுவாயைப் பயன் படுத்திப் போரைச் சாளுக் கியர் முறுக்கவே, சோழர் படை நிலை கலங்கிக் கலைந்து சிதறி ஓடத் தலைப்பட்டது. சோழர் படை நிலை கலங்கிக் கலைந்து கருதி ஆர்ப்பரித்த வண்ணம் சாளுக்கிய வீரர் சோழர் படைகளைத் தொடர்ந்தனர்.
அண்ணன் போர்களில் எல்லாம் இராசேந்திரன் ஈடுபட்டுப் பயிற்சி பெற்றிருந்தான். அவன் ஒரு சில கணங்களுக்குள் நிலை மையைச் சமாளித்தான்.அண்ணன் விழுந்த இடத்திலேயே மற்றொரு யானைமேல் ஏறினான். அண்ணன் முடியைத் தான்