உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

(289

கைப்பற்றி ஆண்டனர். பாண்டிநாடு கைநெகிழவே, சேரநாடும் ஈழநாடும் அதுபோலவே நெகிழ்வுற்றன. குலோத்துங்கன் வடதிசைப் போர் முடிந்தும், இதுவகையில் அவசரப்படாமல், ஆர அமர இருந்து ஆட்சியை வலுப்படுத்தி, படைகளையும் திரட்டிக்கொண்டு1081-ல் தெற்கே படையெடுத்தான்.

பாண்டியருடன் செம்பொன் மாரி என்ற போர்க்களத்தில் ஒரு பெரும் போர் நடைபெற்றது. சேரரும் பாண்டியருக்கு இப்போரில் உதவினர் என்று தெரிகிறது. பாண்டியன் ‘தற்கொலைப்’ படை அல்லது மூலதளப் படையான 'சாவேர்ப் படை' கடைசி மூச்சு வரைப்போராடி மாண்டது. பாண்டியர் ஐவரும் முற்றிலும் தோற்றுக் காட்டில் புகுந்து ஒளிந்து கொண்டனர். பாண்டியர் ஆண்ட முத்துச்சலாபக் கரையும், சையமலை, பொதியமலைப் பகுதிகளும், கன்னியாகுமரிப் பகுதியும் சோழப் பேரரசுக்குள் மீண்டும் இடம் பெற்றன.

‘விட்டதண்டுஎழ மீனவர் ஐவரும்

கெட்டகேட்டினைக் கேட்டிலை போலும்நீ?’

என்று பெரும் பரணியும்,

(கலிங்கத்துப் பரணி 11 - 70)

வடகடல் தென்கடல், படர்வது போலத் தன்பெருஞ் சேனையைஏவி, பஞ்சவர்

ஐவரும் பொருத போர்க் களத்தஞ்சி வெரிந் அளித்துஓடி அரண் எனப்புக்க காடு அறத்துடைத்து நாடுஅடிப்படுத்து

என மெய்க்கீர்த்தியும் இதனைக் குறிக்கின்றன.

சேரநாட்டுப் படையெடுப்பு 1081: விழிஞப்போர் II காந்தளூர்ச்சாலைப் போர் II: கோட்டாற்றுப் போர்

குலோத்துங்கன் ஆட்சித் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தில் சேரநாட்டுப் பகுதியில் மீண்டும் பல சிற்றரசர் தலை யடுத்திருந்தனர். அவர்களில் சேரன் அல்லது திருவாங்கூர் அரசன் ஒருவன் என்று தோன்றுகிறது. ஏனெனில் சேரர் கடற்படை பற்றிக் கேள்விப்படுகிறோம்.