உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(290

||– –

அப்பாத்துரையம் - 16

விழிஞத்தில் போர்க்கஞ்சாத மலைநாட்டு வீரர் மிகப் பலர் தம் உயிரைக் காவு கொடுத்தும் இறுதியில் சேரர் தோல்வியே அடைந்தனர். காந்தளூர்ச் சாலையில் கடற்படைகள் இருமுறை அழிக்கப்பட்டன. கோட்டாற்றுப்போர் கடும் போராயிருந்தது. அதன் வெற்றியின் பின் குலோத்துங்கன் அந்நகரை எரியூட்டினான். ஆனால், போரின் முடிவில் அந்நகரே மீண்டும் செப்பம் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சேர நாட்டிலுள்ள சோழரின் நிலைப்படைக்கு அதுவே தளமாக்கப்பட்டது.

கோட்டாறு என்பது நாகர்கோயிலுக்கு அணிமைக் காலம் வரை வழங்கிய பழம்பெயர். கோட்டாற்று நிலப்படை சோழர் பாளையங்களில் முதன்மையுடையதாயிற்று.

வேலைகொண்டு விழிஞம் அழித்ததும்

சாலைகொண்டதும் தண்டு கொண்டேயன்றோ?

(கலிங்கத்துப் பரணி 11; 72)

‘வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட' (கலிங்கத்துப் பரணி 8; 21)

என்று பரணியும்,

சேலைத்துரந்து சிலையைத் தடிந்து இருகால்

சாலைக் கலம் அறுத்த தண்டினான்’ (விக்கிரம சோழனுலா 46 - 48)

என்ற உலாவும் பாடியுள்ளன.

கலிங்கப்போர் I (தென்கலிங்கம்) 1 1096

தென் கலிங்கம் என்பது கோதாவரி ஆற்றுக்கும் மகேந்திர கிரிக்கும் இடைப்பட்ட நாடு. அது வேங்கை நாடாண்ட கீழைச் சாளுக்கியருக்கு உட்பட்டது. ஆனால், தென் கலிங்க நாடாண்ட வீமன் தன்னுரிமையாக ஆள எண்ணிக் கிளர்ச்சிகள் செய்தான். குலோத்துங்கன் தன் புதல்வன் விக்கிரம சோழனை அனுப்பி அவனை மீண்டும் கீழடக்கினான். விக்கிரம சோழனே (1093 - 1113) கலிங்க நாட்டு ஆட்சியையும் ஏற்றான்.

குலோத்துங்கனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த பாண்டியர் ஐவருள் ஒருவன் தோற்றோடியபின் மீண்டும் வந்து சோழருக்குப் பணிந்து ஆட்சியை மேற்கொண்டிருந்தான். இவனே சடைய