உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

291

வர்மன் பராந்தக பாண்டியன். தென்கலிங்கப் போரில் விக்கிரம சோழனுடன் அவனும் கலந்து கொண்டிருந்தான். அவன் மெய்க்கீர்த்தி இதனால் அவனுக்கும் தென்கலிங்க வெற்றியை உரிமைப் படுத்தியுள்ளது.

தெலுங்க வீமன் விலங்கல்மிசை ஏறவும் கலிங்க பூமியைக் கனல் எரிபருகவும், ஐம்படைப் பருவத்து வெம்படைதாங்கி, வேங்கை மண்டலத்து ஆங்கு இனிது இருந்து

என விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தியும்,

"தெலுங்கவீமன் குளங்கொண்டு தென்கலிங்கம் அடிப்படுத்துத் திசையனைத்தும் உடனாண்ட சிரீ பராந்தகதேவர்’

எனப் பாண்டியர் மெய்க்கீர்த்தியும் இதனை இயம்புகின்றன.

1098-ல் தென் கலிங்கத்தில் மீண்டும் எழுந்த கிளர்ச்சி யொன்றை நரலோக வீரன் என்ற சோழர் படைத்தலைவன் அடக்கினான்.

கலிங்கப் போர் (வடகலிங்கம்) II 1112

வடகலிங்கத்தை ஆண்ட மன்னன் அனந்தவர்மன் 1074-ல் பட்டம் பெற்று 1150 -வரை எழுபத்தைந்து ஆண்டுகள் அளவில் மிக நீண்டகாலம் ஆண்டவன். அவன் சோடகங்க மரபின் முதல் அரசனாதலால், சோழருடன் தொடர்புடையவன். குலோத்துங்கன் புதல்வியையே அவன் மணந்தான் என்றும் கருதப்படுகிறது. அவன் அரசி தமிழ் இளவரசி என்பதில் மட்டும் சிறிதும் ஐயமில்லை. ஒருவேளை அவன் தாயும் தமிழ் இளவரசியாகவே இருந்திருக்கக் கூடும். ஏனெனில் அவன் ஆட்சியில் தமிழும் தமிழ்ப் புலவர்களும் கலிங்கநாட்டில் பேராதரவு பெற்றனர் என்று அறிகிறோம்.

அனந்தவர்மனுக்கும் குலோத்துங்கனுக்கும் பகைமை எப்படி, ஏன் உண்டாயிற்று என்று இன்று நம்மால் அறியக் கூடவில்லை. ஒருவேளை தெலுங்க வீமனுக்கோ,