உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(292

||-

அப்பாத்துரையம் - 16

சாளுக்கியருக்கோ அவன் உடந்தையாய் இருந்திருக்கக்கூடும். அனந்தவர்மன் இரண்டு தவணை திறை கொடாததே போருக்குரிய காரணம் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது.

இப்போரில் முழுப் பொறுப்பேற்றுச் சோழர் படைகளை நடத்திச் சென்ற மாதண்ட நாயகன் வண்டையர்கோன் கருணாகரத் தொண்டை மான் என்பவன். இவனுடன் வாணகோவரையன், முடிகொண்ட சோழன் என்ற வேறு

இரண்டு படைத்தலைவர்களும் துணை சென்றதாகக்

கலிங்கத்துப் பரணியில் காணப்படும் ஒரு தாழிசை கூறுகிறது. சோழப்படைகள் காஞ்சியிலிருந்து புறப்பட்டுப் பல காடுகள், மலைகள், நாடுகள் கடந்து சென்று கலிங்க நாட்டிற் புகுந்து பல நகர்களுக்குத் தீயிட்டுக் கொளுத்தின. அனந்தவர்மன் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து எதிர்த்தான். கடலுடன் கடல் மோதினாற் போன்ற பேராரவாரத்துடன் இருபடைகளும் மோதின, ஒன்றை ஒன்று வளைத்து மொய்த்தன. நீடித்த கைகலப்பின் பின் கலிங்கவீரர் நாற்புறமும் கலைந்தோடினர்.

தொண்டைமான் பல யானை, குதிரை, ஒட்டகங்கள், தேர்கள் மணிக்குவியல்கள் ஆகியவற்றுடன் மகளிரையும் கைப் பற்றினான். மலையில் ஓடிஒளிந்து கொண்ட மன்னனையும் மலையையே வில் வேலியால் சூழ்ந்து நின்று தேடிப்பிடித்தனர், சூறைப் பொருளுடனும் கட்டுண்ட கலிங்க மன்னனுடனும் வீரருடனும் சோணாடு திரும்பினர். குலோத்துங்கன் வெற்றித் தளபதியை எதிர் கொண்டழைத்துப் பெருமதிப்பு வரிசைகள் நல்கிப் பாராட்டினான்.

இப்போரில் மட்டையன், மாதவன், எங்கராயன், ஏஞ்சணன், இராசணன், தாமயன், போத்தயன், கேத்தணன் ஆகிய படைத் தலைவர்கள் உயிர் துறந்ததாகக் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி கூறுகிறது. இவர்களுள் எங்கராயன் என்பவன் அனந்தவர்மன் அமைச்சனென்றும், தாமயன் அவன் தலைமைத் தளபதியென்றும் கலிங்கத்துப் பரணியால் தெரிய வருகிறது.

குண்டூர் மாவட்டத்திலுள்ள 1108-ம் ஆண்டைய கல்வெட்டு ஒன்று சோடர் மரபு மன்னன் வீமன் கலிங்கனை வன்று சோழருக்கு உட்படுத்தியதாகக் கூறுகிறது. இச்சிற்றரசன்