உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

319

அழிவுக்காளாக்கினான். அவன் பெருங் செல்வத்தை யும் படைவலிமையும் தனதாக்கிய பின்னரே, ஆட்சியைத் திரும்ப அவனிடம் ஒப்படைத்தான். திறை செலுத்தும் சிற்றரசனாக அவனை ஆக்கியபின் சிலநாள் திருவரங்கத்திலும், தில்லையிலும் கடவுட் பணிகள் செய்திருந்து, பின் மீண்டும் வடதிசை செல்ல எழுந்தான்.

வேந்தர் கண்டறியா விறல் திண்புரிசை சேந்தமங்மலச் செழும்பதி முற்றிப் பல்லவர் நடுங்கப் பலபோராடி

நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும்

பருமயானையும் பரியும் முதலிய

அரசுரிமைகைக் கொண்டு அரசு அவற்கு அளித்து

என்று அவன் மெய்க்கீர்த்தி இதனைக் குறிக்கிறது.

முடுகூர்ப்போர் : நெல்லூர் வீரமாமுடி விழா

ரு

பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை இரண்டு நூற்றாண்டு களாகத் தென்னாட்டில் இரண்டு பேரரசுகளே இருந்தன. ஒன்று தென்னாடு கடந்த உலகப் பேரரசாகிய சோழப் பெரும் பேரரசு. மற்றது தென்னாட்டில் மீந்த பகுதியை ஆண்ட சாளுக்கியப் பேரரசு. ஆனால், பதின்மூன்றாம் நூற்றாண்டில் இரு பேரரசுகளும் சரிந்தன. தென்னாட்டின் ஒரே பேரரசாகப் பாண்டியப் பேரரசு வளர்ந்து வந்தது. அதற்குப் போட்டியாக வளரத்தக்க வல்லரசுகள் ஹொய்சள அரசு, யாதவ அரசு, காகதீய அரசு ஆகிய மூன்றுமே. அவற்றுள் ஹொய்சளரைப் பாண்டியர் வென்றபின், வடதிசை அரசுகள் யாவும் தென்கோடியில் எழும் அப்புதிய பேராற்றலைத் தடுக்கத் தம்மை வரிந்து கட்டிக் கொள்ளலாயின.

தெலுங்குசோடர் தம் வரலாற்றிலே உச்ச நிலை அடைந் திருந்த காலம் இதுவே. திக்கண மாகவிஞனின் புரவலனான கண்டகோபாலன் ஆட்சியில் அது தெற்கே காஞ்சியையும் வடக்கே நெல்லூரையும் உட்கொண்டு ஒரு வல்லரசாய் இருந்தது. கோப்பெருஞ் சிங்கன் வெற்றிக்குப் பின் சடையவர்மன் சுந்தர